இருசக்கர வாகனத்துக்கு போலி ஆவணம் தயாரித்து சப்ளை செய்த சென்னை வாலிபர் சேலத்தில் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
10:54

சேலம்: இருசக்கர வாகனத்துக்கு போலியாக ஆவணம் தயாரித்து, சப்ளை செய்து வந்த சென்னை வாலிபரை, சேலத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 38. இவரின், மொபட்டை, 2016ல், அதே பகுதியை சேர்ந்த குமார், 35, வாங்கிச் சென்றார். இந்த மொபட், சேலம், மணல் மேடு பகுதியில் சென்ற நிலையில், விபத்தில் சிக்கியது. டவுன் போலீசார் மொபட்டை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். சுப்பிரமணியன் மொபட்டுக்கு இன்சூரன்ஸ் செய்யாததால், அதற்கு இன்சூரன்ஸ் சான்றிதழ் பெற, நண்பரின் தகவலின் படி, சென்னை மாம்பாக்கத்தை சேர்ந்த பிரேம் பிரகாஷ், 32, தொடர்பு கொண்டார். இன்சூரன்ஸ் ஆவணத்துக்காக, 5,000 ரூபாய் பெற்றுக் கொண்டு, எச்.டி.எப்.சி., வங்கியில் இன்சூரன்ஸ் செய்துள்ளது போல் போலி ஆவணங்களை வழங்கினார். இந்த ஆவணத்தை கொண்டு, சுப்பிரமணியன், தன் மொபட் விபத்தில் சிக்கியதால், ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், எச்.டி.எப்.சி., வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவு, பொதுமேலாளர் விஜயலட்சுமி ஆஜராகி, எச்.டி.எப்.சி., வங்கி, அதன் உப நிறுவனத்தின் சார்பில், இன்சூரன்ஸ் செய்யப்பட வில்லை என தெரிவித்தார். அதன் பின்னரே, போலி இன்சூரன்ஸ் ஆவணம் வழங்கப்பட்டு நூதன மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. இந்த மோசடி குறித்து விஜயலட்சுமி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.


சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையறிந்த பிரேம் பிரகாஷ், கடந்த, 2016 முதல் தலைமறைவாக இருந்து வந்தார். மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.


தனிப்படை நடத்திய விசாரணையில், பிரேம் பிரகாஷ், சென்னையிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில், சீனியர் ஆபீஸராக பணியாற்றுவது தெரிய வந்தது. அவரின் மொபைல் போனில் போலீசார் தொடர்பு கொண்டு விசாரணைக்கு ஆஜராகும் படி தெரிவித்தனர். ஆனால், அவர் வரவில்லை. அவரின் நண்பர் ஒருவர் மூலம் பிரேம் பிரேகா?ஷ போலீசார் சென்னையில் இருந்து சேலம் வரவழைத்தனர். நேற்று காலை, சேலம் வந்த அவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பொய்யான ஆவணங்களை தயாரித்தல், போலி கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டது ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலத்தை போல், தமிழகத்தின் பிற இடங்களில் போலி இன்சூரன்ஸ் ஆவணங்களை வழங்கி மோசடியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X