| தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி: கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு Dinamalar
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி: கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
12:58

கரூர்: ''நிகழ்காலத்தில் எவரொருவர் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறாரோ, அவரே வெற்றி பெற முடியும்,'' என, கலெக்டர் அன்பழகன் பேசினார்.


கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் வேலை வாய்ப்பு பயிற்சித் துறை சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: நம் சுற்றுச்சூழல், உறவினர், பெற்றோர், பொருளாதார நிலை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியவில்லை என யாரும் எண்ணுதல் கூடாது. கல்வியோடு சேர்த்து தம்மைத் தகுதியுடைவராக மாற்றிக் கொள்ளவேண்டும். காற்றடைத்த பந்தை எவ்வாறு நீரில் மூழ்கடிக்க முடியாதோ, அதுபோல் தகுதியுடையோரின் வெற்றியை யாரும் நிராகரிக்க முடியாது. அவர்களுக்கு வரவேண்டிய மரியாதை, வேலை, நன்மதிப்பு உள்ளிட்டவை கிடைத்தே தீரும். மாணவ, மாணவியர் தங்களது குறிக்கோளை, இலக்கை நாள்தோறும், ஐந்து நிமிடங்களாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதுபோல், நாள்தோறும் செய்த, செய்யும், செய்யப்போகிற பணிகளை எண்ணிப்பார்த்தல் அவசியம். மனதில் தேவையற்ற சிந்தனைகளை அகற்றி கட்டுப்பாடோடு முயன்றால் இலக்குகள் எளிதில் வசப்படும். ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், உயரிய ஆசைக்கேற்ப தங்களை தகுதியாக்கிக்கொள்வது மிகவும் அவசியம். கடந்த கால வருத்தங்களை பொருட்படுத்தாமல் நிகழ்காலத்தில் எவரொருவர் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறாரோ அவரே எதிர்காலத்தில் வெற்றியாளராக திகழமுடியும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, தொழில்நெறி குறித்த வழிகாட்டும் தகவல்கள் அடங்கிய கையேட்டினை மாணவ, மாணவியர் வழங்கினார். அரசு கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா, தொழில் மைய பொதுமேலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X