நிதி ஒதுக்கியும் ஓய்வு பணியாளருக்கு பணப் பலன் தாமதம்: விரைந்து வழங்க போக்குவரத்து சம்மேளனம் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
12:58

கரூர்: 'ஓய்வுபெற்றவர்களுக்கு பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன மாநில இணை செயலாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: அரசு போக்குவரத்து கழகத்தில், 2018 ஏப்., முதல், 2019 மார்ச் வரை, 6,283 ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, 1,093 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக வழங்கினார். தொடர்ந்து, 2019 ஏப் முதல், நவ., வரை சென்னை கோட்டத்தில், 520, விழுப்புரத்தில், 327, சேலத்தில், 496, கோவையில், 552, கும்பகோணத்தில், 480, மதுரையில், 463, திருநெல்வேலியில், 357, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 460 என, மொத்தம், 3,655 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்க, 840 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நிதி ஒதுக்கி, ஒரு மாதமாகியும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்து விட்டால், பணப் பலன்களை வழங்குவதில் சிக்கல் ஏற்படும். மேலும், கடந்தாண்டு காலதாமதமாக பணிக் கொடை அளிக்கப்பட்டதற்குரிய வட்டி வழங்கவில்லை என, பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போதும், தாமதமாக வழங்கினால், நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடும். ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்களை வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X