| போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்: நெரிசலால் பொதுமக்கள் தவிப்பு Dinamalar
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள்: நெரிசலால் பொதுமக்கள் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
13:00

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், மனோகரா கார்னர் பயணிகளை ஏற்றிச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், மனோகரா கார்னர் பகுதியில் நான்கு வழிகளில் வாகனங்கள் சென்று வருகின்றன. திருச்சி, திண்டுக்கல், தான்தோன்றிமலை, மணப்பாறை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், பழைய திண்டுக்கல் சாலையில் செல்கின்றன. இந்த தடத்தின் வழியாக ஏராளமான மினி பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் சென்று வருகின்றன. நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் சில பஸ்கள், மினி பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதை கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையில், ஒரு மாதத்துக்கு முன், மனோகரா கார்னர் சந்திப்பின் எதிரே டிராபிக் கூண்டு அமைக்கப்பட்டடது. அதில், போலீசார் நின்று கண்காணித்து, அத்துமீறி நிற்கும் பஸ்களை மைக் மூலம் அறிவிப்பு செய்து அனுப்பி வருகின்றனர். போலீசார் இல்லாத சமயங்களில் பெரும்பாலான வாகனங்கள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X