மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு! குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
23:32

கடலுார்: நெல் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்களை கொண்டு வர வேண்டுமென, விவசாயிகள் கூறினர்.



கடலுாரில் கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன், வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மாரியப்பன், வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகவன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ரேணுகாம்பாள், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இளஞ்செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜோதி மணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.



கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:ஜெகதீஸ்வரன் (விவசாயி): நெல் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையாக உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளது.கலெக்டர்: நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சுப்ரமணியன்: சிறுபாக்கம் ஏரி துார்வாரப்படாமல் உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளை கால்நடை நிலையம் அமைக்க வேண்டும்.மாதவன்: நெல் குவிண்டாலுக்கு 1,905 ரூபாய் வழங்கப்படும் என, மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், கேரள அரசு 2,660 ரூபாய் வழங்குவதை போன்று தமிழக அரசும் குவிண்டாலுக்கு விலையை உயர்த்தி வழங்க வேண்டும். நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையாக உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு கொண்டுவர வேண்டும்.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும்.



ரவீந்திரன்: மாவட்டத்தில் 184 கோடி ரூபாய் மதிப்பில் 8 தடுப்பணைகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பணை கட்டி நீரை சேமிப்பதால் நீர் ஆவியாகி சென்று விடும். தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் அதே வேளையில், பூமிக்கடியில் செறியூட்டல் கிணறு அமைத்தும் மழைநீரை சேமிக்க வேண்டும்.நெல் வயல்களில் மழைநீர் தேங்கி, பயிர்களை புகையான் நோய்கள் தாக்கியதால் மகசூல் குறைந்துள்ளது. மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி அமைக்க வேண்டும். நெல் விதைகளை தரம் பார்த்து விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் நெல் முட்டைகளின் எடையளவை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.



முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் ைஹட்ரோ கார்பன் திட்டம், ஷேல் காஸ் திட்டம், மீத்தேன் திட்டம் போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கூட்டரங்கின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் நுாதன போராட்டம்ைஹட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து, டெல்டா மாவட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் கைகளை கயிற்றால் கட்டிக் கொண்டு கலெக்டர் அன்புச்செல்வன் முன்பு மண்டியிட்டு சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தை கைவிட்டு கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X