களமருதூர், அரசூரில் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படுமா?...கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
00:42

புஉளுந்துார்பேட்டை: களமருதுார், அரசூரில் புதிய போலீஸ் நிலையங்கள் மற்றும் அரகண்டநல்லுாரை மையமாகக் கொண்டு போலீஸ் உட்கோட்டம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., கட்டுப்பாட்டில் உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோயிலுார் ஆகிய 3 உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்கள் உள்ளன.மாவட்டம் பிரிப்பிற்கு முன், உளுந்துார்பேட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட உளுந்துார்பேட்டை, எடைக்கல், எலவனாசூர்கோட்டை, திருநாவலுார், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையங்கள் இருந்தன.ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு உளுந்துார்பேட்டை உட்கோட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.ஆனால், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் இருந்த திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையம் விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு விழுப்புரம் உட்கோட்டத்திற்குட்பட்ட போலீஸ் நிலையமாக சேர்க்கப்பட்டது.அதேபோன்று, திருக்கோவிலுார் உட்கோட்டத்திற்குட்பட்ட திருக்கோவிலுார், ரிஷிவந்தியம், திருப்பாலபந்தல், பகண்டை, சங்கராபுரம், வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு, அரகண்டநல்லுார், மணலுார்பேட்டை, கண்டாச்சிபுரம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையங்களும் இருந்தன.அதில் மாவட்டம் பிரிக்கப்பட்டதில் திருக்கோவிலுார் உட்கோட்டத்திற்குட்பட்டிருந்த அரகண்டநல்லுார், கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு விழுப்புரம் உட்கோட்ட போலீஸ் நிலையமாக சேர்க்கப்பட்டன.



இந்நிலையில், விழுப்புரம் உட்கோட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையம் 103 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. அதேபோன்று உளுந்துார் பேட்டை உட்கோட்டத்தில் உள்ள திருநாவலுார் போலீஸ் நிலையம் 93 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.இந்த இரு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட கிராம மக்கள் நீண்ட துாரத்திற்கு திருவெண்ணெய்நல்லுார், திருநாவலுார் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு திருவெண்ணைநல்லுார் போலீஸ் நிலையத்தில் இருந்து அரசூரில் புதிய போலீஸ் நிலையமும், திருநாவலுார் போலீஸ் நிலையத்தில் இருந்து பிரித்து களமருதுாரில் ஒரு புதிய போலீஸ் நிலையமும் உருவாக்க வேண்டும்.மேலும், விழுப்புரம் உட்கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம் தாலுகா, டவுன், மேற்கு, கண்டமங்கலம், வளவனுார், விக்கிரவாண்டி, பெரியதச்சூர், காணை, புதிதாக சேர்க்கப்பட்ட திருவெண்ணெய்நல்லுார், அரகண்டநல்லுார், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன.அதிகளவில் போலீஸ் நிலையங்களை உள்ளடக்கியுள்ள விழுப்புரம் உட்கோட்டத்தில் இருந்து அரகண்டநல்லூரை மையமாக வைத்து அரகண்டநல்லுார் உட்கோட்டத்தை உருவாக்க வேண்டும். அரகண்டநல்லூர் உட்கோட்டத்தில், அரகண்டநல்லுார், திருவெண்ணெய்நல்லுார், அரசூர், கண்டாச்சிபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களை உள்ளடக்கிய புதிய உட்கோட்டத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மட்டுமின்றி போலீசாரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.திருநாவலுார் போலீஸ் நிலையத்தில் இருந்து களமருதுாரிலும், திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் இருந்து அரசூரில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.இவ்வாறு செய்வதால், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நீண்ட துார அலைச்சல் போக்கு தவிர்க்கப்படும்.



சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து செல்லவும், உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் வழிவகுக்கும். எனவே சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வர் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X