அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கேள்விக்குறி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
01:06

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் அண்ணன், தம்பி இருவர் மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் போலீசை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் தம்பியை போலீசார் கைது செய்தனர்.



ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சண்முகம் 58. இவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது மகன்கள் துரை மற்றும் தம்பி சேதுபதி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ஆட்டோவில் தந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.



இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது பணியில் இருந்த செவிலியர் கல்பனா பார்வையாளர் நேரம் முடிந்து விட்டது. ஒவ்வொருவராக பார்த்து வருமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் செவிலியரிடம் தகராறில் ஈடுபட்டனர். அங்கு வந்த மருத்துவமனை பாதுகாவலர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர்.



இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள் பாதுகாவலர்களை சராமரியாக தாக்கினர். அப்போது பணியிலிருந்த போலீஸ் ஏட்டு சந்திரசேகர் சகோதரர் இருவரையும் மருத்துவமனையில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அங்கு அவரையும் தாக்கிய சகோதரர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.



இதில் படுகாயமடைந்த 3 பாதுகாவலர்கள், ஏட்டு சந்திரசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய சகோதரர்களை கைது செய்யக்கோரி செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் இரவு 11:00 மணிக்கு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நகர் போலீசார் அவர்களை சமாதானம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாவலர் திரிசங்கு, காவலர் சந்திரசேகர் அளித்த புகாரில் எஸ்.ஐ., தங்க முனியசாமி வழக்கு பதிவு செய்து சேதுபதி 35, என்பவரை கைது செய்தார்.



தலைமறைவாக உள்ள அவரது அண்ணன் துரையை தேடி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர் கதையாகி வருவதால் பார்வையாளர் நேரத்தை முறைப்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X