வெள்ளை ஈக்கள் தொல்லையை 'தாங்க முடியலே!' பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 ஜன
2020
02:21
பதிவு செய்த நாள்
ஜன 25,2020 01:14

திருப்பூர்:'ரூக்கோஸ்' வெள்ளை ஈக்கள் தொல்லை அதிகரித்து, தென்னை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், பேரிடர் பாதிப்பாக அறிவித்து, நிவாரண உதவி வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.இதுவரை இல்லாத அளவுக்கு, 'ரூக்கோஸ்' சுருள் வெள்ளை ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை - திருப்பூர் மாவட்டங்களில், தமிழகத்திலேயே, அதிக அளவு தென்னை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆங்காங்கே, சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கம் இருந்தது. இந்தாண்டு, தாக்குதல் அதிகரித்துள்ளது.தென்னங்கீற்றில் உள்ள சாற்றை உறிஞ்சி, மரங்களின் காய்ப்புத்திறன் குறைந்து விடுகிறது. குறிப்பாக, இளநீர் பயன்பாட்டுக்கான, செவ்விளநீர், பச்சை ரகம், வீரிய ஒட்டுரக தென்னை மரங்கள், முழுவதும் காய்ந்து போயுள்ளது. பசுமையான தென்னை மரம், தீயில் கருகியது போல் மாறியுள்ளது.இது குறித்து, நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:பாதிப்பில் இருந்து தப்பி வந்த, நெட்டைரக தென்னை மரங்களும், இந்தாண்டு பூச்சி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. இத்துடன், மக்காச்சோளம், தக்காளி, காய்கறி பயிர்கள், கால்நடை தீவனங்கள், சிறு தானிய பயிர்கள் என, எல்லாவற்றிலும், சுருள் வெள்ளை ஈ பெரும் சேதத்தை விளைவித்து வருகின்றன.விவசாயிகள், கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். வேளாண்துறை, வேளாண்மை பல்கலை பரிந்துரைத்த மருந்துகளும், பூச்சிகளை கட்டுப்படுத்தவில்லை.


மாவட்டம் முழுவதும், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்கன் ரூக்கோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை, பேரிடராக அறிவித்து, உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.


வேளாண்துறை அதிகாரிகள் பேசுகையில், ''வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த, மருந்துகள் கை கொடுக்கவில்லை. மாறாக, இனக்கவர்ச்சி பொறி, விளக்குப்பொறி உட்பட பிறவகை நடவடிக்கை மூலமாக மட்டுமே, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த முடியும். இப்பாதிப்புகளில் இருந்து தென்னை மரங்களை காப்பாற்ற, விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X