மனதை ஒரு நிலைபடுத்தும் பிராணயாமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
01:40

அருப்புக்கோட்டை : இன்றைய உலகில் ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் ஓடி கொண்டே இருக்கிறோம். வேகம், அவசரம், பரபரப்பு என நம்மை ஆட்டி படைக்கின்றன. இதனால் உடல், மனம் பாதிப்பு அடைகிறது. ஒவ்வொருவருக்கும் குடும்ப சூழ்நிலை, பணியிடம், சுற்று சூழல் பலவிதமான மன அழுத்தத்தை கொடுக்கிறது. அதிக மன அழுத்தம் நம் இதயத்தை பாதிக்கிறது. ஆண்களும், பெண்களும் இந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி பார்க்கும் 'டிவி' தொடர்களினால் வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக பாதிப்பு அடைகின்றனர். இன்றைய இளைய சமுதாயமும் சமூக வளைதளங்களில் மூழ்கி கிடக்கிறது. எந்தவித சிந்தனையும் இன்றி குனிந்த தலை நிமிராமல் எதை பற்றியும் கவலைப்படாமல் அலைபேசியில் பேஸ்புக்,வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், யு டியூப் என மூழ்கி கிடக்கின்றனர். இவற்றில் அதிக நேரத்தை செலவிட்டு உடல் ,மனம் அளவில் பாதிப்பு அடைகின்றனர்.



இதுபோன்ற சூழ்நிலையில் விடுபட ஏதாவது செய்ய நினைக்கின்றனர். வாக்கிங், தியானம், யோகா, எட்டுநடை, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி போன்ற பயிற்சிகளுக்கு தள்ளப்படுகின்றனர். அதிலும் திருப்தி அடையாது வேறு ஒன்றை தேடுகின்றனர். மனதையும், உடலையும் ஒருமுகப்படுத்தும் 'வாழும் கலை' அமைப்பினர் இவர்களை சரியான வழியில் கொண்டு சென்று அவர்களுடைய 'டென்ஷன்' குறைக்க பல்வேறு பயிற்சிகளை கொடுக்கின்றனர். இளைய சமுதாயமான மாணவர்களுக்கு இதுபோன்ற பயிற்சியினை இந்த அமைப்பினர் வழங்குகின்றனர்.அந்தவகையில் அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லுாரி மற்றும் கான்வென்ட் , மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி நடந்தது. மனதை, உடலை ஒருமுகப்படுத்தும் சுதர்சனா கிரியா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்களின் 'பீட்பேக்' இதோ.இன்றைய இளைய சமுதாயம் எதை பற்றியும் கவலைப்படாமல் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், யு டியூப் என மூழ்கி கிடக்கின்றன. இவற்றில்தான் அதிக நேரத்தை செலவிட்டு உடல், மன அளவில் பாதிக்கின்றனர். இவர்களுக்கு வழிதரும் 'டானிக்'காக யோகா உள்ளது.மன அமைதிக்கு அவசியம் 'ஆர்ட் ஆப் லிவ்ங்' மூலம் மனதை ஒருமுகப்படுத்து பற்றி பயிற்சி எடுத்தது நல்ல அனுபவமாக இருந்தது. எந்தவித பரபரப்புமின்றி உடல் அமைதியாக இருப்பதை உணர்கிறேன். எந் நேரமும் டென்ஷன் ஆக இருக்கும் வாழ்க்கையில் இதுபோன்ற யோகா மன அமைதிக்கு அவசியமானது. தொடர்ந்து பயிற்சி எடுக்க உள்ளேன்.-அபிநயா, கல்லுாரி மாணவிஉடல், மனத்திற்கு புத்துணர்ச்சியோகா ஒரு கலை.அதுவாழ்வின் உன்னத நிலை. 'வாழும் கலை' அமைப்பு மூலம் பிராணயாமா, சுதர்சனா கிரியா போன்ற மூச்சு பயிற்சி கற்றுக் கொண்டேன். இதை கற்று கொள்வதால் உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. என் நண்பர்களிடமும் இந்த பயிற்சியை எடுக்க சொல்ல உள்ளேன்.- விக்ரம், கல்லுாரி மாணவர்என்னுள் பல மாற்றங்கள்மூச்சு பயிற்சி சுலபமாக இருந்தது. இப்பயிற்சி மூலம் ஆழ்ந்த நிம்மதியான துாக்கம் வருகிறது. மனதை ஒருநிலைபடுத்த முடிகிறது. பயிற்சி முடிந்த பின் ஒரு பணியை செய்யும் போது முழு ஈடுபாட்டுடன் உற்சாகமாக செய்ய முடிகிறது. 4 நாட்கள் நடந்த இந்த முகாமில் என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது எனக்கே வியப்பாக உள்ளது. தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும்.- கோபி கிருஷ்ணன்,கல்லுாரி மாணவன்.தெளிவான சிந்தனை பெற்றேன்'வாழும் கலை' மூலம் தரப்படும் பயிற்சி மாணவர்களுக்கேற்ற பயிற்சி. கோபம் குறைந்து சாந்தமாக,பொறுமையாக இருக்க உதவுகிறது. தெளிவான சிந்தனையுடன் படிக்க முடிகிறது. நன்கு புரிந்து படிக்க உதவுகிறது. பயிற்சியில் மன அழுத்தம், டென்ஷன் குறைந்துள்ளது.-- நிஷா, கல்லுாரி மாணவி.ஆற்றலை வெளி கொணரும் யோகாஇன்றைய கால கட்டத்தில் மாணவர்கள் சமூக வளை தளங்களில் ஈர்க்கப்பட்டு சிக்கி தவிக்கின்றனர். இதிலிருந்து விடுபட யோகா பயிற்சி சிறந்த ஆயுதமாகும். மாணவர்கள் உடல் , மனதளவில் அதிக பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அவர்களுடைய ஆற்றல், படிப்பறிவு, சிந்தனை, புத்தி கூர்மை பாதிப்பு அடைகிறது. இவற்றை மீண்டும் வெளி கொணர யோகா பயிற்சி கை கொடுக்கிறது. இளைய சமுதாயத்தின் இந்திய நாட்டின் வருங்கால துாண்கள். இவர்களை துவள விடாமல் ஆற்றலை பெருக்கி மனதை உற்சாகப்படுத்தும் வகையில் நாங்கள் கொடுக்கிறோம்.- வாசுகி சீனிவாசன், ஆசிரியை, 'வாழும் கலை', சென்னை.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X