பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
01:40

சிவகாசி: சமூக சேவை செய்ய வேண்டும் என்பது பெரும்பாலானவர்களுக்கு எண்ணமாக இருக்கும். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலை அமையாது. ஒருவருக்கு உதவி வேண்டும் என்றால் பணமாகத்தான் கொடுத்து உதவ வேண்டும் என்றில்லை. அவர்களுக்கு தேவைப்படுகின்ற வகையில் எப்படி வேண்டுமானாலும் உதவலாம். மீன் வாங்கி தருவதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்பார்கள். தற்காலத்தில் பெண் சொந்த காலில் நின்று சம்பாதிக்க விரும்புகிறாள். அந்த வகையில் சிவகாசி சந்தி கூட தெரு கஸ்துாரிபாய் காந்தி மகளிர் நல்வாழ்வு இயக்கம் பெண்களுக்கு இலவசமாக தையல் கற்று கொடுக்கிறது.தையலுடன் ஆரிஸ்கர், சாக்குப்பை பின்னுதல், எம்பிராய்டரிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெற்ற பலரும் தொழில் துவங்கி சுயமாக சம்பாதிக்கின்றனர். இது தவிர இங்கு பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கம்ப்யூட்டர் கற்றுத் தரப்படுகிறது. கம்ப்யூட்டரில் பயிற்சி பெற்றவர்களால் பாடம் நடத்தப்பட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.கஸ்துாரிபாய் காந்தி மகளிர் நல்வாழ்வு இயக்கம் பொறுப்பாளர் கனகமணி, ''பெண்கள் சொந்த காலில் நின்று முன்னேற தையல் கற்றுத் தரப்படுகிறது. குறைந்த கட்டணத்தில் பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கு கம்ப்யூட்டரும் கற்று தரப்படுகிறது. கம்ப்யூட்டரில் சென்டரில் ஆறு மாதத்தில் ஒரு கோர்சினை முடித்து சான்றிதழ் பெற ரூ. 7000 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் இங்கு மாதம் ரூ. 500 மட்டுமே பெறப்படுகிறது. அந்தப் பணமும் அவர்களின் சான்றிதழுக்காக கொடுக்கப்படுகிறது,''என்றார். தொடர்புக்கு 98414 21650.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X