தொடங்குவதோடு சரி! மண்புழு உரம் தயாரிப்பதற்கான ஷெட், தொட்டிகள் வீண்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
01:45

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் சேரும் குப்பையை பிரிக்கும் பணிகள் முறையாக நடக்காததால் மண்புழு உரம் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ெஷட் மற்றும் தொட்டிகள் வீணாகிறது.



ஊராட்சிகளில் வீடுகள் தோறும் மக்கும், மக்கா குப்பை சேகரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. வீடுகள் தோறும் குப்பையை இத்திட்டத்தில் மக்கும் மக்கா குப்பையை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி கிராமங்களில் 100 நாள் வேலை பணியாளர்களை கொண்டு மக்கம் மக்காத குப்பை தரம்பிரித்து தனித்தனி குழிகளில் கொட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக தனிக்குழிகளும் அமைக்கப்பட்டது. இப் பணியைசெய்ய 150 குடும்பங்களுக்கு ஒரு பணியாளர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தூய்மை காவலர்கள் என பெயரும் சூட்டப்பட்டது. இதோடு குப்பை சேகரிக்க மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது. இதன் அருகில் மண்புழு உரம் தயாரிக்க ஓலை கூரையால் வேய்ந்த கட்டடம் அமைக்கப்பட்டது.



ஆனால் இத்திட்டம் முறையாகசெயல்படுத்தவில்லை. குப்பையை பிரித்து வாங்காததுடன் தொலைவில் உள்ள இக்கூடத்திற்கு குப்பையும் கொண்டும் வருவதில்லை.அத்துடன் அந்தந்தபகுதி நீர் நிலை, மெயின் ரோடு, கண்மாய் பகுதிகளில் கொட்டி தீ வைக்கப்படுகிறது. இதனால் இத்திட்டம் செயல்படாமல்முடங்கிக்கிடப்பதுடன் கிராமம் முழுவதும் குப்பை தேங்கி உள்ளது. மண்புழு உர தயாரிப்பும் நடக்கவில்லை. இதற்காக அமைக்கப்பட்ட அனைத்தும் காட்சிப்பொருளாக உள்ளது. இதை முறையாக செயல்படுத்தி அரசின் நோக்கம் நிறைவேற ஊராட்சிகள் முறையான ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.



குடிமகன்களின் கூடாரமாகிறதுதொடக்கத்தில் வேகமெடுத்த இத்திட்டம் நாளடைவில் வீணாகி வருகிறது. மக்கும் , மக்கா குப்பையை தரம் பிரிக்க தோண்டப்பட்ட குழிகளில் இதுவரை குப்பையை தரம் பிரித்து கொட்டவில்லை. மண்புழு உரம் தயாரிப்புக்கென கட்டப்பட்டகட்டடம் மற்றும் மண்புழு பிரிப்பதற்கான தொட்டிகள் சேதமடைந்து உள்ளது. தற்போது அந்தந்த பகுதி குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. இத்திட்டத்தை முறையாகசெயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.- பாலகுமார், சமூக ஆர்வலர், ராஜபாளையம்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X