பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 6.29 லட்சம் பேர்!சிகிச்சை பெற்ற வெளிநோயாளிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
01:44

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், கடந்த ஆண்டில், ஆறு லட்சத்து, 29 ஆயிரத்து, 729 பேர் வெளிநோயாளிகளாகவும், ஒரு லட்சத்து, மூன்று ஆயிரத்து, 208 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு, தினமும், இரண்டாயிரம் பேருக்கும் அதிகமாக வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.


பொள்ளாச்சி மட்டும் இன்றி, ஆனைமலை, வால்பாறை மற்றும் மலைவாழ் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் மருத்துவ ஆதாரமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உள்ளது.அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டில், ஆறு லட்சத்து, 29 ஆயிரத்து, 729 பேர் வெளிநோயாளிகளாகவும், ஒரு லட்சத்து, மூன்று ஆயிரத்து, 208 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.'மேஜர்' அறுவை சிகிச்சை, 3,756, 'மைனர்' அறுவை சிகிச்சை, 12,081ம் நடந்துள்ளன. அவசர சிகிச்சையாக, 42,600 பேரும்; போலீஸ் விசாரணைக்கு உட்பட்ட, 4,390 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். விபத்து வழக்குகளில், 6,698 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். பிரேத பரிசோதனை, 345யும் செய்யப்பட்டுள்ளன. மொத்த பிரசவங்கள், 2,563ல், 1,655 பிரசவங்கள் 'சிசேரியன்' முறையில் செய்யப்பட்டுள்ளன. பாம்பு கடிக்கு, 187 பேரும்; நாய் கடிக்கு, 3,076 பேரும்; டயலாசிஸ் சிகிச்சை, 4,001 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.மொத்தம், 27 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், 1,604 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டு, 2,595 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது.காப்பீடு திட்டம் மூலம், 1,344 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன் மூலம், ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து, 644 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறியதாவது: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், அவசர சிகிச்சை பிரிவில், 40 லட்சம் ரூபாய் செலவில் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது.ரத்த வங்கி பராமரிப்பு செய்து பிப்., மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்குவதற்கு விடுதி, பயிற்சி அறை, நுாலகம், 37 லட்சம் ரூபாயில் அமைக்கப்படுகிறது.


கேன்சருக்கு கோவையில் முதல்கட்ட சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை பிரிவு மூலமாக தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் டாக்டர் படிப்பு முடித்து பயிற்சி பெற வரும் டாக்டர்களை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் டாக்டர்கள் பற்றாக்குறை போக்க முடியும். தற்போது, 35 டாக்டர்கள் உள்ளனர்.


இன்னும், 25 டாக்டர்கள் தேவைப்படுகின்றனர்.நிரந்தர, தற்காலிகம் என, 75 செவிலியர்கள் உள்ளனர்; 40 செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவிலியர் கல்லுாரி துவங்கவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.மருத்துவமனையில் போதுமான வசதிகளை மேம்படுத்தி, வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X