பயணிகளை பாடாய்படுத்தும் எத்தல் ஹார்வி ரோடு; பயணித்தாலே பழுதாகும் ஆட்டோ, டூவீலர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
01:47

சாத்துார் : மேடு பள்ளமாக பயனற்ற நிலை , இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியாததால் எத்தல் ஹார்வி ரோட்டில் பயணிக்கும் பயணிகள் படாதபாடுபடுகின்றனர்.



சாத்துார் நகராட்சியின் பராமரிப்பில் எத்தல் ஹார்வி ரோடு உள்ளது. தனியார் மற்றும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் இப்பகுதியில் செயல்பட்டு வருகின்றன. சாத்துார் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லும் பஸ்களும் இந்த ரோடு வழியாக வந்து செல்கின்றன. ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பயணிகளும் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். இந்த ரோட்டில் தனியார் திருமண மண்டபம், மெட்ரிக், தொடக்கப் பள்ளி, மகளிர் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன.



காலை முதல் இரவு வரை வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். சிவகாசி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை, எதிர்க்கோட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் இந்த ரோட்டைதான் பயன்படுத்துகின்றனர். குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.



சாலையின் ஒரங்களை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் அபாயமும் உள்ளது. சேதமடைந்த ரோட்டை புதிதாக போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எத்தல் ஹார்வி ரோட்டில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. போதுமான வெளிச்சம் இல்லாததால் வழி பறி சம்பவங்கள் நடக்கின்றன. சி.சி.டி.வி., கேமிரா மூலம் போலீசார் கண்காணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். வெளிச்சம் தரும் மெர்குரி விளக்கு பொருத்த வேண்டும்.-ஜெயச் சந்திரன், வியாபாரி.



குண்டும் குழியுமான ரோட்டால் ஆட்டோ, டூவீலர்கள் அடிக்கடி பழுதாகிறது. பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாமல் விட்டுள்ளனர். இதில் சரக்கு வாகனங்கள் பதிந்து கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய ரோடு போட வேண்டும்.- மாரியப்பன், ஆட்டோ டிரைவர்.



பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் கழிப்பறை வசதியில்லை. வாறுகால்கள் துார்ந்து போன நிலையில் காணப்படுகிறது. மழை நீர் வடிய வழியின்றி ரோட்டில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் திறந்த வெளியை நாடுவதை தவிர்க்க இலவச கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.- குமார், டூவீலர் மெக்கானிக்.



நடவடிக்கை எடுக்கப்படும்



பாதாள சாக்கடை பணி முடிந்தவுடன் ரோடு போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாறுகால் சுத்தம் செய்ய சுகாதார ஆய்வாளர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.- ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர், சாத்துார்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X