தலையில் குட்டு வைத்த போலீசார்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
01:56

பெ.நா.பாளையம:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை தலையில் குட்டு வைக்கச் சொல்லி, பின், அவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து போலீசார் வழி அனுப்பினர்.பொது மக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்து மற்றும் உயிர் இழப்பை தவிர்க்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 31 வது சாலை பாதுகாப்பு வாரம் இம்மாதம், 20 முதல், 27 வரை கடைபிடிக்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு வார விழாவில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் அணிவது மற்றும் 'சீட் பெல்ட்' அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஓட்டுனர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.நரசிம்மநாயக்கன்பாளையத்தில், தேசிய நெடுஞ்சாலை துறை, வடக்கு வட்டார போக்குவரத்து துறை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் இணைந்து, சாலை பாதுகாப்பு வார விழாவை நடத்தினர்.நேற்று காலை, நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை தலையில் குட்டு வைக்க, சொல்லி அறிவுறுத்தி, குட்டு வைத்த பின்னர் கையில் ரோஜாப்பூ கொடுத்து, இனிமேல் தவறாமல் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும். இல்லாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுரை கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., மணி, தேசிய நெடுஞ்சாலை துறை டிவிஷனல் இன்ஜினியர் செல்வகுமார், உதவி டிவிஷனல் இன்ஜினியர் தங்கராஜ், வடக்கு வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஓ., குமாரவேல், உதவி இன்ஜினியர் மணிகண்டன் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., செல்வநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், விபத்தின்றி வாகனங்களை இயக்குவது குறித்த துண்டு பிரசூரங்கள் வினியோகிக்கப்பட்டன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X