விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர்...அவதூறாக பேசினால் பொறுத்துக்கொள்ள முடியாது விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர்...அவதூறாக பேசினால் பொறுத்துக்கொள்ள முடியாது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
02:11

விழுப்புரம்; விழுப்புரத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில், தனிப்பட்ட காழ்புணர்ச்சிகள் குறித்து பேசக்கூடாது என விவசாய பிரதிநிதிகளை, கலெக்டர் கண்டித்து பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.



விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது, சம்பா நெல் அறுவடை செய்யப் பட்டு வருகிறது. இத னால், மாவட்டத்தில் கடந்த ஆண்டைபோன்று, அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்த அன்றே, பணப் பட்டுவாடா செய்ய வேண்டும்.ஓங்கூர் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். மாவட்டத்தில் நெல், வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கான உற்பத்தி மானியம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. மானியம் கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் கூடுதல் சாகுபடியில் ஈடுபடுவார்கள்.அவலுார்பேட்டை பகுதியில் மின் கோபுரம் அமைக்கும் நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. நிவாரணம் கேட்டு பணியைத் தடுக்கும் விவசாயிகளை, போலீசார் மூலம் மின் கோபுரம் பணியை மேற்கொள்ளும் நிறுவனத்தினர் மிரட்டுகின்றனர்.



எனவே, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் பட்டா மாற்றம் விண்ணப்பித்தால், பல மாதங்களாக அலைக்கழிக்கின்றனர். ஆனால், பணம் கொடுத்தால் உடனடியாக பட்டா மாற்றம் வழங்குகின்றனர்.மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்ட ஏரிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இதேபோன்று, ஏரிகளுக்குச் செல்லும் தண்ணீர் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பை அகற்றி, துார்வார வேண்டும்.கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும். அரசு மற்றும் ஆலை நிர்வாகத்தினர் கரும்பு கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். வறட்சியை கருத்தில்கொண்டு சுகர்பீட் எனப்படும் நான்கரை மாதத்தில் அறுவடை செய்யப்படும் கரும்பு பயிரை அறிமுகப்படுத்த வேண்டும்.



விழுப்புரம் மாவட்டத்தில் 100 கி.மீ., துாரம் நீர்நிலைகள் வழியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பைப் லைன் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி புதைத்தால், பைப்பில் உடைப்பு ஏற்பட்டால் நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, நீர்நிலைகள் வழியாக புதைக்காமல், மாற்று வழியில் பைப் லைன் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் 18 நாட்களுக்கு தண்ணீர் திறக்கவுள்ளனர். அந்த தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் மாவட்டத்தின் கடைமடை பகுதி வரை வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.கலெக்டர் கண்டிப்புகூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதி சுப்ரமணியன் பேசுகையில், 'மாவட்ட நிர்வாகம் நடக்கிறதா, இல்லையா என தெரியவில்லை. திருவக்கரை ஆற்றில் அதிகாரிகள் துணையோடு மணல் திருட்டு நடப்பதாக, கலெக்டர், எஸ்.பி., மற்றும் ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு புகார் கூறியும் நடவடிக்கை இல்லை' என ஆவேசமாக பேசினார்.அதற்கு கலெக்டர் அண்ணாதுரை பதிலளித்து பேசுகையில், 'எந்த புகாராக இருந்தாலும், என்னை நேரில் சந்தித்து கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். புகாரை என்னிடம் கொடுத்துவிட்டு, நடவடிக்கை இல்லை என்றால் கேள்வி கேளுங்கள். வேறு ஒருவரிடம் புகார் கொடுத்துவிட்டு என்னை கேள்வி கேட்டால் பதில் கூற முடியாது.கூட்டத்தை சீர்குலைக்க முயற்சி செய்யாதீர்கள். தனிப்பட்ட காழ்ப் புணர்ச்சி மூலம் மாவட்ட நிர்வாகத்தை அவதுாறாக பேசுவது மற்றும் கூட்டத்தை சீர்குலைக்க முயன்றால் பொறுத்துக்கொள்ள முடியாது. விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது' என்றார்.இதனால், கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X