அரசனுாருக்கு வரமறுக்கும் பெரியாறு தண்ணீர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
23:49

சிவகங்கை : சிவகங்கை அருகே அரசனுார் பகுதி பெரியாறு - வைகை பாசன கால்வாயில் 10 ஆண்டாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால், விவசாயம் பொய்த்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.


சிவகங்கை அருகே அரசனுார், கிளாதிரி, படமாத்துார் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சம் ஏக்கரில் விவசாயிகள் கரும்பு,நெல், காய்கறி விவசாயம் செய்து வந்தனர். இவர்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தும் நோக்கில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் 1979 ல் மதுரை மாவட்டம் திருவாதவூரில் இருந்து கிளாதிரி வழியாக கட்டையம்பட்டி, கோனார்பட்டி, அரசனுார், படமாத்துார் வரை பாசன கால்வாய் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் திறக்கப்படும் பெரியாறு கால்வாய் தண்ணீர் கால்வாய் வழியே ஓடி 60 க்கும் மேற்பட்ட கண்மாய்களை நிரப்பி செல்லும். இதன் மூலம் பாசன வசதிகளை ஏற்படுத்தி விவசாயிகள் விவசாய பணியை மேற்கொண்டனர்.வரமறுக்கும் பெரியாறு தண்ணீர்.


ஆனால், பெரியாறு, வைகை அணையில் போதிய நீர் இருப்பு இருக்கும் காலகட்டத்தில் கூட கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக அரசனுார் பகுதி பாசன கண்மாய்களுக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், காலப்போக்கில் இப்பகுதியில் நெல், கரும்பு, தோட்டக்கலை பயிர்கள் விளைந்த நிலங்கள், தரிசு நிலங்களாகின. இப்பகுதி விவசாயிகள் பல முறை அரசிடம் கோரிக்கை வைத்தும், பெரியாறு- வைகை பாசன கால்வாய் வழியே தண்ணீர் திறக்கப்படவில்லை.


தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்ததால், கடந்த ஆண்டு அமைச்சர் பாஸ்கரன் முயற்சியால், குடிநீர் தேவைக்காக மட்டுமே அரசனுார் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வந்தனர். அதற்கு பின் விவசாயத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை.அழிவின் விளிம்பில் விவசாயம்இப்பகுதியில் தண்ணீரின்றி விவசாயம் அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ள, விவசாயத்தை காக்க தமிழக அரசு திருவாதவூரில் மதகணையில் இருந்து கிளாதரி, அரசனுார், படமாத்துார் கால்வாய்களில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்து, விவசாயத்தை காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.காக்குமா அரசுஅரசனுார் விவசாயி எம்.கலைபிரியன் கூறியதாவது: கிளாதரியில் இருந்து பெரியாறு பாசன கால்வாயில் தண்ணீர் வராததால், கால்வாய் கரைகள், மதகுகள் சேதமடைந்துள்ளன.


கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பெரியாறு - வைகை பாசன நீர் வராததால், விவசாயம் பொய்த்து வருகின்றன. கிணற்றில் ஊற்று கிடைக்காமல், விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைகின்றனர். தமிழக அரசு, பெரியாறு, வைகை அணை நிரம்பும் தருவாயில், இப்பகுதி கால்வாய்க்கும் தண்ணீர் திறந்து, விவசாயத்தை காக்கவேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X