தேசிய வாக்காளர் தின ஊர்வலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
23:53

சிவகங்கை : சிவகங்கையில் 10 வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.


மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரண்மனை வாசலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை கலெக்டர் ஜெயகாந்தன் துவக்கி வைத்தார்.கலெக்டர் முன்னிலையில் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமபிரதீபன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்தன், நில அளவைத்துறை உதவி இயக்குநர் யோகராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் தேவகோட்டை ஆர்.டி.ஒ. சங்கரநாராயணன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். கோலப்போட்டியில் மெர்லின் முதலிடம், மகேஸ்வரி இரண்டாமிடம், அங்காளஈஸ்வரி மூன்றாமிடம் பெற்றனர். ஆசிரியை முத்துலட்சமி நன்றி கூறினார். இளையான்குடி, வாக்காளர் தின ஊர்வலம் தாசில்தார் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.


இதில் இளையான்குடி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் பஸ் ஸ்டாண்டில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். தேர்தல் துணை தாசில்தார் அசோக்குமார், சாலைக்கிராம மண்டல துணை தாசில்தார் விஜயகுமார், தேர்தல் பிரிவு முதுநிலை ஆர்.ஐ.,பாலமுருகன் மற்றும் இளையான்குடி வருவாய் ஆய்வாளர் நாகநந்தினி உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.



மானாமதுரைமானாமதுரையில் நடைபெற்ற ஊர்வலத்தை மானாமதுரை தாசில்தார் பஞ்சாபகேசன் துவக்கி வைத்தார்.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட ஊர்வலம் பள்ளியிலிருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்தது.தேர்தல் துணை தாசில்தார் ரமேஷ், மண்டல துணை தாசில்தார் ஆனந்தபூபாலன், ஆர்.ஐ.,ஜேம்ஸ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X