| அரிமா சங்க ரத்த தான முகாம் Dinamalar
அரிமா சங்க ரத்த தான முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
00:00

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கோவில் நகர அரிமா சங்கம் சார்பில் அரகண்டநல்லுாரில் ரத்ததான முகாம் நடந்தது.லட்சுமி வித்யாலயா ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்த முகாமிற்கு, சங்க தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். செயலர் பரணி முன்னிலை வகித்தார் மாவட்ட தலைவர் ராஜா சுப்ரமணியம் முகாமை துவக்கி வைத்தார்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் டாக்டர் பிரக்யா தலைமையிலான மருத்துவக் குழுவினர் 35 யூனிட் ரத்தம் பெற்றுக் கொண்டனர். அரிமா சங்க நிர்வாகிகள், ஐ.டி.ஐ., மாணவர்கள், ஆசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.அரிமா சங்க நிர்வாகிகள் ஆரோக்கியராஜ், மனோகர குருராஜன், திருக்கோவிலுார் அரிமா சங்க தலைவர் டேனியல், செயலர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X