போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
00:19

செங்கல் சூளையில் வழிப்பறிவெள்ளவேடு: திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜூலு. இவருக்கு சொந்தமான, செங்கல் சூளை, வெள்ளவேடு அடுத்த, கொத்தியம்பாக்கம் கிராமத்தில் உள்ளது.இங்கு, நேற்று முன்தினம், விஷ்வா, தினேஷ், ஸ்டீபன்ராஜ், வீரா, தீபன்ராஜ் மற்றும் சுகுமார் ஆகியோர் நுழைந்து, லாரி டிரைவர் பாலு என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாய் பறித்துச் சென்றனர். இதுகுறித்து, வரதராஜூலு கொடுத்த புகாரின் பேரில், வெள்ளவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.மூவருக்கு கத்திகுத்துவெள்ளவேடு: சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 40. இவர், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள, மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம், இவர், வேலை முடிந்து, வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கோலப்பன்சேரி அருகே வந்ததும், காரை நிறுத்தி விட்டு, இயற்கை உபாதை கழிக்க சென்றார்.அப்போது, பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த, அடையாளம் தெரியாத இருவர், சீனிவாசனிடம் கத்தியை காட்டி, பணம் கேட்டனர். பணம் தர மறுத்தததால், அவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.மற்றொரு சம்பவம்சோழவரத்தைச் சேர்ந்த, செல்வராஜ், லாரியில் காலி பாட்டில்களுடன் வந்து கொண்டிருந்தார். சொக்கனல்லுார் அருகில், லாரியை நிறுத்தி விட்டு, ஓய்வெடுத்தார்.அப்போது, இரண்டு நபர்கள் அவரை பணம் கேட்டு மிரட்டி, கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டனர்.திருமழிசையைச் சேர்ந்தவர் விஜி. இவரது லாரியை, சந்தோஷ்குமார் என்பவர், திருமழிசையில் இருந்து, காவல்சேரி அருகே, வெளிவட்ட சாலை வழியாக ஓட்டி வந்து கொண்டிருந்தார்.அப்போது மர்ம நபர் இருவர், லாரியை வழிமடக்கி, ஓட்டுனரை கத்தியால் வெட்டி, 1,500 ரூபாய் பறித்துச் சென்றனர்.இவ்விரண்டு சம்பவங்கள் குறித்து, வெள்ளவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X