மாவட்டத்தில் 120 பேருக்கு 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
00:44

திருப்பூர்:''டெங்கு பாதித்த பின் சிகிச்சை அளிப்பதைவிட, வருமுன் காக்க வேண்டும்,'' என, அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்ட அளவிலான, அனைத்து அரசுத்துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு, கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ.,கள் நடராஜன், குணசேகரன், தனியரசு, டி.ஆர்.ஓ., சுகுமார், திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் முன்னிலை வகித்தனர்.பல்லடம் எம்.எல்.ஏ., பேசுகையில், ''மாநகராட்சியில் உள்ள, பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளுக்கு, குடிநீர் வினியோகம் சரியாக நடப்பதில்லை.மாநகராட்சி அதிகாரிகள், புதிதாக இணைக்கப்பட்ட பகுதி என்பதால், சில வார்டுகளை புறக்கணிக்கின்றனர். மாநகராட்சி பட்ஜெட்டில், இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு சேர்த்துதான், நிதி ஒதுக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. தனியார் பணி நடக்கிறது; மாநகராட்சி பணிகள் நடப்பதில்லை,'' என்றார்.அமைச்சர் பேசியதாவது:மாவட்டத்தில், 4,222 பயனாளிகளுக்கு இலவச ஆடு வழங்க வேண்டும்; 3,100 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள பயனாளிகளுக்கும் விரைவாக வழங்க வேண்டும். 150 பயனாளிகளுக்கு மட்டும் கறவை மாடு வழங்கப்பட்டுள்ளது; 250 பயனாளிகளை கண்டறிந்து, விரைவில் மாடு வழங்க வேண்டும்.நாட்டுக்கோழி குஞ்சு வழங்கும் திட்டத்தில், 400 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள, 7,450 பயனாளிகளுக்கும் விரைவாக கோழிக்குஞ்சு வழங்க வேண்டும்.மாவட்ட அளவில், 120 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதித்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, வருமுன் காக்க வேண்டும். அதாவது, டெங்கு கொசுவை ஒழித்து, காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும். நிலவேம்பு கஷாயம் வழங்கியும், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியும், சுகாதாரத்துறையினர், டெங்கு தாக்காமல், மக்களை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X