கிடப்பில் ரோடு புதுப்பித்தல் பணிசுக்காம்பட்டி ஊராட்சியில் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
00:47

வடமதுரை : தேர்தலில் தோற்றவர் தனது பட்டா நிலம் வழியே செல்லும் தார் ரோட்டில் முட்களை போட்டு அடைத்துள்ளதால் புதுப்பித்தல் பணி கிடப்பில் உள்ளது.


வடமதுரை ஒன்றியம் சுக்காம்பட்டி ஊராட்சி பூசாரிப்பட்டி பகுதியை மாமரத்துப்பட்டி பகுதியுடன் இணைக்க எஸ்.புதுப்பட்டி வரை 2.25 கி.மீ., தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மீட்டர் அகலம் கொண்ட இந்த ரோடு பல இடங்களில் தனியார் பட்டா நிலங்களில் வழியே அமைக்கப்பட்டுள்ளது.அருகிலிருந்த விவசாயிகள் பொதுநலன் அடிப்படையில் ரோடு அமைக்க இடம் தந்தனர். இதில் சிறுபகுதி முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான கமால்மைதீனுக்கும் சொந்தமானது. நடந்து முடிந்த தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கமால்மைதீன் தோல்வியடைந்தார்.


இதனால் அவரது இடம் வழியே செல்லும் ரோட்டை முட்களால் அடைத்தார். இதனால் பல கிராமத்தினர் 4 முதல் 6 கி.மீ., துாரம் சுற்றுப்பாதையில் செல்கின்றனர். இதற்கிடையே இந்த ரோட்டை புதுப்பிக்க ரூ.36 லட்சம் செலவில் துவங்கிய பணி இரு மாதங்களாக கிடப்பில் உள்ளது.ஒப்பந்ததாரர் கூறுகையில், ''முட்கள் அகற்றப்படாததால் பணி தொடரவில்லை'' என்றார். ஒன்றிய அதிகாரிகளும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் மக்கள் அவதி தொடர்கிறது.


இப்பகுதியினர் கூறுகையில், ''தேர்தல் முடிந்துள்ளதால் தற்போதைக்கு மக்களின் ஓட்டுக்கு அவசரமில்லை என்ற கணக்கில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்'' என ஆதங்கப்பட்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X