கபளீகரம்! அணைப்பட்டியில் வைகை ஆற்றுப்படுகை ... கோர்ட் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
00:49

நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே மணல் மாபியாக்கள் வைகை ஆற்றுப் படுகையை கபளீகரம் செய்து வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.


சித்தர்கள் நத்தம், மல்லியம்பட்டி மயான பகுதியில் தனியார் '2 சி' பட்டா பெற்று உள்ள 16 ஏக்கர் இடத்தில் மணல் மாபியாக்கள் இயந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளி வருகின்றனர். இவர்களை எதிர்ப்பவர்களுக்கு பணத்தைக் கொடுத்து வாயை அடைத்து விடுகின்றனர். எதிர்ப்பு வரும் கிராமங்களுக்கு ரூ. 20 முதல் 35 லட்சம் வரை கொடுத்து தத்தெடுத்து உள்ளனர்.கண்டு கொள்வதே இல்லை வருவாய், போலீஸ் துறையில் கீழ்நிலையில் உள்ள சாதாரண அலுவலர்கள் முதல் அதிகாரி வரை மணல் மாபியாக்கள் மாதந்தோறும் கவனித்து விடுவதால் இதனை அவர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை.


அதிகாரிகள் கண்டித்தாலும், மாநில உயர் அதிகாரிகள் தடை போட்டு வருகின்றனர். வைகை, தாமிரபரணி ஆறுகளில் மணல் அள்ள ஐகோர்ட் 13 மாவட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் ஆற்றோரம் மணல் அள்ளப்படுகிறது. சவடு மண் அள்ளுவதாக அனுமதி சீட்டு பெற்று, அதையும் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலான அளவில் தோண்டி அள்ளுகின்றனர். விவசாயிகள் வேதனை மணல் மாபியாக்கள் 16 ஏக்கர் இடத்தில் 8 அடி ஆழம் வரை இயந்திரம் மூலம் மணல் அள்ளி வருகின்றனர்.


மணல் மாபியாக்களின் அதிரடி நடவடிக்கையால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் அருகில் உள்ள கிராமங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர். மக்களுக்காக இருக்கும் அதிகாரிகள் மணல் மாபியாக்களின் கவனிப்பை பெற்றுக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X