லைப் அண்டு ஸ்டைல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
01:34

மருத்துவ ஆலோசனைபீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் அழகியல் மற்றும் அழகு சார்ந்த அறுவை சிகிச்சை துறை சார்பில், முடி நடுதல் மற்றும் முடி உதிர்தல் பிரச்சனைகளுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம், இன்று காலை, 8:00 மணிக்கு நடக்கிறது. முகாமில் கலந்துகொண்டு, சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு சலுகை கட்டணத்தில், முடி நடுதலுக்கான அறுவை சிகிச்சை செய்யப்படும்.


கண் சிகிச்சை முகாம்


பொம்மண்ணம்பாளையம் நண்பர்கள் நற்பணி மன்றம், தி ஐ பவுண்டேசன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துகின்றன. பொம்மண்ணம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடைபெறும். ஐ.ஓ.எல்., லென்சுடன் கூடிய அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து செலவு இலவசமாக செய்து தரப்படும்.பாரத் கலா சங்கமம்கோவையில் உள்ள அனைத்து மாநில கலாசார அமைப்புகளையும் ஒன்றாக இணைத்து பாரத் கலா சங்கமம் என்ற புதிய அமைப்பு இன்று துவங்கப்படுகிறது. நமது நாட்டில் உள்ள அனைத்து கலாச்சாரங்களையும் ஒருங்கிணைத்து, ஒரே குரலாக ஒலிக்க வைக்கும் முயற்சியாக இந்த அமைப்பு துவங்கப்படுகிறது


.இதன் பண்பாட்டு கலாசார நிகழ்வாக, 'பாரத் உத்சவ்-2020 திருவிழா', இந்திய திருவிழா எனும் தலைப்பில் இன்று, 6:30 மணிக்கு கிக்கானி பள்ளி அரங்கில் நடக்கிறது; இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினெட் ஜெனரல் பி.எம்.ஹரிஷ் உரையாற்றுகிறார்.புரந்தரதாசர் ஆராதனைபி.என்.ராகவேந்திரராவ் மெமோரியல் டிரஸ்ட் சார்பில் நடக்கும் புரந்தரதாசர் ஆராதனை விழா,


இறுதி கொண்டாட்டத்தை தவறவிடாதீர். கோவை ஆர்.எஸ்.புரம், புரந்தரதாசர் கலையரங்கத்தில் இன்று நடக்கும் விழாவில், கிருஷ்ணமூர்த்தி குழுவினர், தமிழில், புரந்தரதாசர் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். மாலை, 6:30 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது.நுால் வெளியீடுகோவை இலக்கியச் சந்திப்பின், 111ம் நிகழ்வு, காந்திபுரம், கிளேசியர்ஸ் பார்க்கில் நடக்கிறது. காலை, 10:30 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும் அந்நிகழ்வில், 'இறையன்பு வாசகனுபவம்' என்கிற நுால் வெளியிடப்படுகிறது. 'மழை நிரம்பிய கால்சட்டைப்பை', 'எமக்கும் தொழில்', 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' ஆகிய கவிதை நுால்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X