பிரதான கால்வாயில் உடைப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
01:42

பராமரிப்பு பணியில் பி.ஏ.பி., அதிகாரிகள் தீவிரம்முதல் மண்டல பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறப்புஉடுமலை, ஜன. 26-பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், பிரதானக்கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், திருப்பூர், கோவை மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்காம் மண்டல பாசனத்திற்கு, கடந்த ஆண்டு, செப்., 25ல் தண்ணீர் திறக்கப்பட்டு, ஜன.,9ல் நிறைவு செய்யப்பட்டது.முதலாம் மண்டல பாசனத்திலுள்ள, 94,521 ஏக்கர் நிலங்களுக்கு, நாளை (27ம் தேதி) முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகாவில், 27,446 ஏக்கர் நிலங்களும், மடத்துக்குளம், 7,492 ஏக்கர், தாராபுரம், 8,395 ஏக்கர், பல்லடம், 7,887 ஏக்கர், திருப்பூர் தாலுகா, 11,309 ஏக்கர், காங்கயம், 15,392 ஏக்கர் என, 77,921 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதே போல், கோவை மாவட்டத்திலுள்ள, பொள்ளாச்சி தாலுகாவில், 12,567 ஏக்கர் நிலங்களும், சூலூர் தாலுகாவில், 4,033 ஏக்கர் என, 16,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பிரதான கால்வாயில் உடைப்பு பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு, 148 கி.மீ., துாரம் உள்ள பிரதானக்கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணையிலிருந்து, 1.6 வது கி.மீ., முதல், 7.1 கி.மீ., துாரம் வரை, ஏறத்தாழ, ஆறு கி.மீ., துாரம் கால்வாயில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள மண், கரிசல் மண்ணாக உள்ளதால், கால்வாய் கரைக்கு சிலாப் ஒட்டினாலும், கான்கிரீட் அமைத்தாலும், மண் இளகி, சரிவு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்து விடும் போதும், அபரிமிதமான நீர்க்கசிவு ஏற்பட்டு, அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்ட போது, இக்கால்வாய் கரை சரிந்தது. தற்போது, முதல் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், கால்வாய் கரைகளை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நிரந்தர தீர்வுக்கு நிதி ஒதுக்கவில்லை தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, தொழில் நுட்ப வல்லுனர் குழு மூலம், ஆறு கி.மீ., துாரத்திலும் உள்ள மண் மாதிரிகள் போர்வெல் அமைத்து சேகரிக்கப்பட்டு, விரிவான ஆய்வு செய்யப்பட்டது. 'ஜியோ சின்தெடிக்' முறையில் கரை அமைக்கும் முறையில், செயற்கை மண் அடுக்குகள் உருவாக்குதல், மணல் மூட்டைகள், பிளாஸ்டிக் தடுப்பு, கான்கிரீட் அமைத்தல் என பல கட்ட பணிகளுக்கு, 48 கோடி ரூபாய்க்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், மூன்று ஆண்டாகியும், நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், அடிக்கடி இப்பகுதியில் பராமரிப்பு மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், 'பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்திற்கு, நாளை, பிற்பகல், 12:00 மணிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்காக, பிரதான கால்வாய் மற்றும் கிளைக்கால்வாய்கள் பராமரிப்பு பணி நடந்துவருகிறது,' என்றனர்.திருமூர்த்தி அணை நிலவரம்நேற்று காலை நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள, 60 அடியில், 49.55 அடியாக இருந்தது. நீர் இருப்பு,1,502.79 மில்லியன் கன அடியாக இருந்தது. நீர் வரத்து, வினாடிக்கு, 668 கன அடியாகவும், வெளியேற்றம், 29 கன அடியாகவும் இருந்தது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X