அறிவிப்போடு முடங்கியது பள்ளி முழுவளர்ச்சி திட்டம்: மீண்டும் செயல்படுத்த கல்வித்துறைக்கு வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2020
01:47

உடுமலை:கல்வியில் மட்டுமின்றி, கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுப்புற சூழலிலும் அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில், பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு பிடித்தமான கல்விச்சூழலை ஏற்படுத்தும் பள்ளிச்சூழலை அமைப்பதற்கு 'பள்ளி முழு வளர்ச்சித்திட்டம்' கடந்த 2011-12 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.கல்வித்துறையின் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. பள்ளி முழு வளர்ச்சித்திட்டத்திற்கு, 2014ம் ஆண்டு நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் இதுவரை அவ்வாறு, எந்த, நிதியும் ஒதுக்கப்படவில்லை. இத்திட்டத்தில், பள்ளியின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை தவிர, பள்ளிச்சூழலை மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பள்ளி நிர்வாகத்திடம் கருத்துகள் கேட்கப்பட்டது.பள்ளி நிர்வாகத்தினரும் ஆவலுடன் தங்களின் பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் குறித்து கருத்துரு அனுப்பினர்.இதில், பள்ளியின், சூழலில், ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துகளை சுவர்களில் அச்சிடுவது, கழிப்பறை சுற்றுச்சுவர்களில் குழந்தைகள் கவரும் வகையிலான வண்ண ஓவியங்களை வரைவது, பள்ளியிலுள்ள மரங்களை சுற்றி, இருக்கைகள் அமைத்து, மரங்களின் பயன்களை வடிவமைப்பது,இயற்கை சூழலில் பாடம் நடத்துவதற்கான ஏற்பாடு, துாய்மை, கல்வியின் முக்கியத்துவம் குறித்த வாசகங்களை வகுப்பறை சுவர்களில் அமைப்பது போன்ற ஏற்பாடுகளைஇத்திட்டத்தின் மூலம் செயல்படுத்த தயாராக இருந்தனர். நிதி ஒதுக்கீடு இல்லாததால், மாணவர்களுக்கு பயனுள்ள இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான இத்திட்டம், போதிய விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாதிரிப்பள்ளிகளாக சில பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கு தேவையான வசதிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.இருப்பினும், இத்திட்டம் பள்ளியின் சூழலை முழுமையாக மாணவர்களுக்கு ஏற்றதாக மாற்றவதற்கானதாக இருப்பதால், கல்வித்துறை இத்திட்டத்தை செயல்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X