கலைந்து போன நினைவுகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2020
03:37

மறந்ததும், மறைந்ததும் கலைந்ததும் இன்று மலரும் நினைவுகளாய், மனதை மயிலிறகாய் வருடிச் செல்கிறது. உதிர்ந்த உறவும், வாடும் மனமும், மறைந்த காடும், மாசுபட்ட காற்றும், வறண்டிருக்கும் நிலமும், தண்ணீரில்லா நீர்நிலையும், வெளுத்த வானும், மடுவாக மாறிய மலையும், இன்று வடுவாக காட்சியளிக்கின்றன.'வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. வான்மதியும், நீரும், கடல்காற்றும், மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை.மனிதன் மாறி விட்டான்' என கவியரசர் கண்ணதாசன் பாட்டு போன்று எனது என்ற நிலைபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ அன்றே மனிதன் மாறி அனைத்தையும் மாற்றி விட்டான்.'நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ' என மகாகவி பாரதியார் வருந்தியது போல அற்புதமாக இறைவன் கொடுத்த வாழ்வும், இயற்கை வரமும் தடமாறி செல்வதை காணும் போது மனம் வாடுகிறது. கலைந்து போனவற்றையும், தொலைந்து போனவற்றையும் நினைவு கூர்ந்து நல்லவற்றை வரும் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் கட்டாயம் உருவாகியுள்ளது.உதிர்ந்த உறவுகள்'பற்று அற்ற கண்ணும், பழைமைபாராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள'மனித உறவுகள் வேறுபாடு நிறைந்தது. சிக்கல் உடையது. பொறுமையுடன் சிக்கலுக்கு தீர்வு கண்டால் சுற்றத்தாரிடம் இருந்து தெளிவான அன்பான உறவுகளை பெறலாம். ஒன்று கூடி வாழலாம். அன்று கிராமங்கள் அதிகம் இருந்ததால் உறவினர்கள் ஒன்று கூடி இன்பத்திலும், துன்பத்திலும் தோள்கொடுத்து வாழ்ந்தனர். கல்விச்சாலையே கற்றல், கற்பித்தல், வழிகாட்டுதல், வழிநடத்துதல், அறிவுரை பகிர்தல் என அனைத்துக்கும் புகலிடமாக இருந்தது. நாம் படித்த கல்விச்சாலை கற்ற வகுப்பறை, கற்பித்த ஆசிரியர்கள், பழகிய நண்பர்கள், விளையாடிய இடங்கள் அனைத்தும் அனைவருக்கும் கண் முன்னே நிற்கும்.
மனவலிமைஅக்கல்விச்சாலையை இன்று நினைவு கூர்ந்தாலும் மனிதில் சுகமான நினைவுகளுடன், நெகிழ்வால் கண்ணீர் சுரக்கும். குழந்தைகளும் அன்று இயற்கையோடு இயைந்த விளையாட்டுக்களையே விளையாடினர். தோட்டத்தில் பட்டாம்பூச்சிக்கு பின்னால் ஓடினர். காற்றில் பட்டம் விட்டு அது செல்லும் வழியாக சென்றனர். பிஞ்சுக்கரங்களால் மண்ணில் தண்ணீர் விட்டு பொம்மை செய்தனர். பரம்பரம் செய்ய மரம் தேடி அலைந்தனர். இயற்கை காற்று சூழ்ந்த மாசற்ற மைதானத்தில் கபடியும், நொண்டியும், நுங்கு வண்டியும், கிட்டிப்புல்லும் கோலிக்குண்டும் விளையாடு மகிழ்வோடு உடலுக்கு வலிமை சேர்த்தனர்.
குளங்களிலும், ஆறுகளிலும் பலர் கூடி நீராடி மகிழ்ந்தனர். மாலை நேரங்களில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வானொலி பெட்டி முன் கூடி அன்றைய செய்திகளை கேட்டு பிறருக்கு இன்னல் தராத கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டனர். புத்தக சாலைகளுக்கு சென்று அரிய புத்தகங்களை தேடி, வாசித்தலை சுவாசமாக்கி கொண்டனர். திருவிழாக் காலங்களில் சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடி ஊரையே மகிழ்வடைய செய்தனர்.பெரியவர்கள், குழந்தைகளுடன் உறங்கும் நேரத்தில் நீதிக்கதைகளை கூறி நேர்மறை எண்ணத்தை வளர்த்தனர். கூட்டுகுடும்பத்தில் பாசத்துடன், பரிவையும் நேசத்துடன் உறவையும், உணவுடன் உணர்வையும், வார்த்தைகளுடன் வாழ்க்கையின் நல்லறத்தையும், பணியின் போது பணிவின் உயர்வையும், நடை முறையில் கலாசார பண்பாட்டையும் கூறி குழந்தைகளை நெறிப்படுத்தினர். குழந்தைகளும் உடல் வலிமையுடன், மனவலிமையும் பெற்றார்கள். இன்று சிந்தித்து பார்க்கும் போது அனைத்துமே நினைவுகளாக மட்டுமே வந்து செல்கின்றன.தேவையில்லாத தேடல்கள்இல்லம் என்பது உறவால் இணைக்கப்பட்ட கட்டுமானமாகும்.
இன்று அந்த கட்டுமானத்திலிருந்து கூட்டுக்குடும்பம் சிதைந்து காலத்தின் கட்டாயத்தால் தனிக் குடும்பமாக மாறி விட்டது.'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்'வாழும் முறையால் தான் மனிதனும் தெய்வத்துள் வைக்கப்படுகிறான். அன்பே தவம். வாழ்வே வரம் என்பது மாறி மனித வாழ்க்கை இன்று சில தேவையற்ற தேடல் களையும், தேவைகளையும் நோக்கி பயணிக்கிறது. வேலி இல்லாத பயிரும், காவல் இல்லாத வாழ்க்கையும் பயனற்றதாய் போய் விடும்.
தகுந்த வேலியும், காவலும் இல்லாததால் இன்று தனிக்குடும்பம் தவிக்கிறது. பொருளாதார முன்னேற்றத்திற்காக பெற்றோர் பணியின் பின்னே ஓடிக் கொண்டிருப்பதால் குழந்தைகளின் தேடல்களை அறிந்து மனம் விட்டு பேசி தீர்வு காண முடியவில்லை. முக்கிய கருத்து பரிமாற்றமின்மையால் இல்லத்தில் கருத்து வேறுபாடு தோன்றுகிறது. எதையும் எடுத்துக்கூற, கேட்க, பொறுமையின்மையால் வாழ்வில் விரிசல்கள் தோன்றி மோதல் உருவாகிறது. உறவு நிலைகள் பலவீனப் பட்டதால் குழந்தை காப்பகமும், முதியோர் இல்லமும் அதிகரித்து வருகின்றன. என்னிலையில் உயர்ந்தாலும் முன்னறி தெய்வங்களான பெற்றோரையும், பெற்ற குழந்தைகளையும் தன்னிலைப்படுத்தினால் வாழ்வு பயனுறும். காலச்சூழற்சியால் குழந்தைகள் பெற்றோர் முகம் காணாது, அலைபேசி, கணினியின் முகம் பார்த்து வளர்கின்றனர்.மறைந்த இயற்கை வரம்''ஆறு இருக்கும் பக்கத்துல ஊரு வாழ்ந்துச்சு, ஊரு மட்டும் இருக்குதய்யா, ஆற காணல, போன இடம் தெரியல, பறவை நட்ட காடுகளை பாவிசனம் அழிக்குதே, நன்றி மறந்து சிரிக்குதே''மறைந்த இயற்கை வரத்தை தேடும் போது மேற் கூறிய அழகான நாட்டுப்புறப்பாடல் நினைவுக்கு வருகிறது. மண்ணை எடுத்து, மண் அரிப்பை உருவாக்கி, மண் வளத்தை குறைத்து, நீர்போக்கை மாற்றி, நீரில்லா ஆறு எனப்பெயர் சொல்லும் நிலைமையில், அமிழ்தாய், மழையாய், மண்ணுக்கு வந்த தண்ணீர் மனிதர்களால் கண்ணீர் விட்டு புகலிடம் இன்றி வறண்டு கிடக்கிறது.''கரகத்தால் நீர் அட்டிக் காவை வளர்க்கார், நகரகத்தில் நிற்றிரோ நல் நெஞ்சீனிரே'' பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்ரே திருமூலர் காடுகளின் பயனை, நீரின் தேவையை மனிதர்களின் குணம் அறிந்து தீர்க்கமாக வலியுறுத்தியுள்ளார். நீர் இன்றி அமையாது உலகு. மண்ணில் மரம் ஊன்றினால், விண்ணில் மேகம் சூழும் என்பதை மனிதன் மறந்து விட்டான். அகழ்வாரை தாங்கும் நிலத்தின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.எல்லையை மீறினால் வரமாக வந்த இயற்கை எதிராக மாறி விடும்.மறையும் பழக்க வழக்கங்கள்அன்று உண்ட உணவு இயற்கையாக, எளிமையாக, சுவையாக, வலிமையை தருவதாக இருந்தது. அன்றாடம் பொருள் வாங்கி மண் சட்டி, விறகு அடுப்பு, அம்மி, ஆட்டுக்கல், இயற்கை உரம் என பயன்படுத்தப்பட்டதால் உணவுக்கே தனி ருசி இருந்தது. இயற்கையில் கிடைத்த இளநீர், பதநீர், குளிர்ச்சி தரும் நீராகாரம் குடித்து உடலை இதமாக வைத்து கொண்டனர். ஆடைகளை குளத்திலோ, ஆற்றிலோ துவைத்து, நண்பர்களோடு பேசி மகிழ்ந்து, உடலுக்கு வலிமை தரும் நீச்சலையும் கற்றுக் கொண்டனர்.மரநிழலில் கயிற்றுக்கட்டிலில் படுத்து சுகமான துாக்கத்தை இதமாக அடைந்தனர். உண்ணும் உணவில், பழகும் முறையில், உடுத்தும் ஆடையில், காலத்திற்கு ஏற்ப பல கலாசார மாற்றங்கள் உருவாகின. வாழ்வில் பாதை மாறுவதாலும், விதிகளை மீறுவதாலும், வாதம் செய்வதாலும், வாழ்க்கைத் தடம் மாறுகிறது.இன்றைய மாற்றங்கள்கணினி வந்தவுடன் புத்தகம் தேடுவது நின்று விட்டது. அலைபேசி வந்ததுடன் கடிதம் எழுதுவது மறந்து போனது. குளிரூட்டும் பெட்டி வந்தவுடன் வசந்தம் தரும் இயற்கை காற்று மறந்து போனது. செயற்கை மணத்தால், பூக்களின் மணம் மறந்து போனது. வாட்ஸ் ஆப் வந்தவுடன் பேசுவது மறந்து போனது. தொலைக்காட்சி வந்தவுடன் மனித உறவே மறந்து போனது.நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே...ஏதோ ஒன்றை தொலைத்தது போல... கண்களின் ஓரம் கண்ணீர் வருதே... என்ற பாடல் வரிகள் மனதின் ஒரத்தை நெகிழ்வாக தொட்டுச் செல்கிறது. தொலைந்து போன கனவுகளை நினைவுகளாக்கி, முடியாது என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்து, முடியும் என தொடர்வோம்.-முனைவர் ச.சுடர்க்கொடி,கல்வியாளர், காரைக்குடி94433 63865

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X