வேன் கவிழ்ந்து 12 பேர் காயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
00:13

பொள்ளாச்சி, சேத்துமடை அண்ணா நகருக்கு துக்கம் விசாரிக்க, தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தருமாத்துாரணியில் இருந்து வேனில், 15 பேர் வந்தனர்.சேத்துமடை கோழிப்பண்ணை அருகே வந்த போது, வேன் டிரைவர் சங்கரன்கோவில் புள்ளியம்பட்டியை சேர்ந்த மகேஷ், துாங்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.வேன் டிரைவர் மகேஷ், 23, சங்கரன் கோவில் தருமாத்துாரணி பகுதியை சேர்ந்த இருளப்பன், 74, ராஜன், 55 உள்பட, 12 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.பணம் பறித்த வாலிபர் கைதுபொள்ளாச்சி, திப்பம்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல்; கூலித்தொழிலாளி. இவர், பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தார்.அப்போது, அவ்வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர், 25, சக்திவேலிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.சக்திவேலை தாக்கி, 500 ரூபாய் பணம் பறித்துள்ளார். அங்கு இருந்த பொதுமக்கள், ராஜசேகரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'நெகமம் கொப்பரை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ராஜசேகர், இதுபோன்று வழிப்பறி, பணம் பறிப்பு செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது,' என்றனர்.வாலிபருக்கு ஓராண்டு சிறைபழநி, தெப்பம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 27. இவரும் வால்பாறை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட்டை சேர்ந்த ஜெகன்நாதன், 27, இருவரும் கடந்த, 2009ம் ஆண்டு அக்., மாதம், 25ம் தேதி வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு பைக்கில் சென்றனர்.வாட்டர்பால்ஸ் அருகே சென்ற போது, பைக் விபத்துக்குள்ளானதால், பின்னால் அமர்ந்து சென்ற ஜெகன்நாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கை விசாரித்த, வால்பாறை கோர்ட்டில் மாஜிஸ்திரேட் கவிதா, பைக் விபத்தில் உயிர்பலிக்கு காரணமான ராஜேஷ்குமாருக்கு, ஒராண்டு சிறை தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.லாட்டரி விற்ற ஒருவர் கைதுவால்பாறை நகரில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனைமலை, எஸ்.ஐ., சதீஷ்குமார் தலைமையில், பறக்கும் படை போலீசார் வால்பாறை கடைகளில் திடீர் ரெய்டு நடத்தினர்.அப்போது, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டு மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.இதனையடுத்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாட்டரி சீட்டு விற்பனை செய்த, வால்பாறை கலைஞர் நகரை சேர்ந்த செல்வம், 54, என்பவரை கைது செய்து, 100 லாட்டரி சீட்டு மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X