'ஸ்மார்ட்' அட்டை! மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கல்:ஒன்றியம் வாரியமாக சிறப்பு முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

29 ஜன
2020
02:12
பதிவு செய்த நாள்
ஜன 29,2020 00:42

திருப்பூர்:ஸ்மார்ட்' அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமில் நேற்று, 920 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் விவரத்தை சேகரித்து, புதிய திட்டங்களை செயல்படுத்த வசதியாக, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.மாநில அரசுகளின் அடையாள அட்டை பெற்றுள்ள, 21 வகையான, மாற்றுத்திறனாளிகளுக்கு, மத்திய அரசின், தனித்துவ அடையாள அட்டை (ஸ்மார்ட் அட்டை) வழங்கப்படுகிறது. இதற்காக, ஆன்லைன் மூலம் விவரம் பதிவு செய்யப்படுகிறது.மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 'ஸ்மார்ட்' அட்டைக்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கியுள்ளது. நேற்று, அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி ஒன்றியங்களில் முகாம் நடந்தது. காங்கயம், பல்லடம், பொங்கலுாரில் இன்றும், தாராபுரம், குண்டடம், மூலனுார், வெள்ளகோவிலில், நாளையும் முகாம் நடக்கிறது.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலத்தில், 31ம் தேதி சிறப்பு முகாம் நடக்க உள்ளது. திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் வந்து, விவரங்களை சமர்ப்பித்தனர்.


இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் கூறியதாவது:இன்று (நேற்று) நடந்த முகாமில், 920 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆதார் அட்டை, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு, பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட, ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல்; இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ; மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையுடன் வந்து விண்ணப்பிக்கலாம்.இதுதவிர, http://www.swavalambancard.gov.in என்ற இணையதள முகவரியிலும், பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, 0421 2971165 என்ற எண்களில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
29-ஜன-202010:27:47 IST Report Abuse
RADE சரியான முகவரி ://www.swavlambancard.gov.in/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X