போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2020
01:07

பூட்டை உடைத்து திருடியவர் சிக்கினார்தேனாம்பேட்டை: நந்தனம், எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் இளவரசி, 58. இரு தினத்திற்கு முன், இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 4 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 26 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். தேனாம்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில் தி.நகரைச் சேர்ந்த சூர்யா, 19, என்பவர் சிக்கினார். அவரிடமிருந்து, 2 சவரன் நகை, 220 கிராம் வெள்ளிப் பொருட்கள், 5,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள பார்த்திபன் என்பவரை தேடி வருகின்றனர்.தலைமறைவு குற்றவாளி அகப்பட்டார்துரைப்பாக்கம்: பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் பிரசாந்த், 24. பெயின்டர். அதே பகுதியைச் சேர்ந்தவர் முரளி, 29. இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. 5ம் தேதி நடந்த தகராறில், முரளி, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, கம்பியால் பிரசாந்தை சரமாரியாக தாக்கினார். துரைப்பாக்கம் போலீசார், இரண்டு பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த முரளியை, நேற்று கைது செய்யப்பட்டார்.வாலிபரை குத்தியவருக்கு, 'கம்பி!'ஓட்டேரி: வியாசர்பாடி, ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 19. இவர், 27ம் தேதி இரவு, ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது, இருவர் அவரை கத்தியால் தாக்கி தப்பினர். அக்கம்பக்கத்தினர் செல்வராஜை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரித்த ஓட்டேரி போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வா, 19, என்பவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.கஞ்சா விற்ற இருவருக்கு, 'காப்பு!'கண்ணகிநகர்: துரைப்பாக்கம், எழில் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன், 30. அதே பகுதியில் உள்ள, அரசு பள்ளி வளாகத்தில் வைத்து, கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். கண்ணகி நகர் போலீசார், நேற்று, விக்னேஷ்வரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.திருவொற்றியூர்: கொருக்குப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்தவர் ஜான் பீட்டர், 23. நேற்று காலை, திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பகுதியில், நண்பர்களுடன் நின்றிருந்தார். போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து, சோதனை செய்ததில், 1.1 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஜான் பீட்டரை கைது செய்தனர்.முதியவரிடம் மொபைல் பறிப்புவண்ணாரப்பேட்டை: காலடிப்பேட்டை, ராமானுஜம் சாலையைச் சேர்ந்தவர் பழனிவேல், 58; இவர் நேற்று, புதுவண்ணாரப்பேட்டை, அறிஞர் அண்ணா திட்ட சாலை வழியாக நடந்து சென்றபோது, அவ்வழியே டூ - வீலரில் வந்த இருவர், பழனிவேலின் மொபைல் போனை பறித்து தப்பினர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.பா.ம.க., பிரமுகருக்கு, 'போக்சோ'கீழ்ப்பாக்கம்: டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன் காணாமல் போனார். கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்தனர். இதில், பா.ம.க., 102வது வட்ட செயலர் சத்யா, 32, என்பவர், சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்து, சிறுமியை டி.பி.சத்திரத்தில் விட்டு தலைமறைவானார். சத்யா மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார், அவரை தேடுகின்றனர்.பெண்ணை தாக்கி 9 சவரன் பறிப்புபம்மல்: பம்மல், சங்கர் நகர், எல்.ஐ.சி., காலனியைச் சேர்ந்தவர் ராதா, 63: காவல் துறையில் அமைச்சு பணியாளர் பிரிவில், கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, பம்மலில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது, மர்ம நபர்கள், ராதாவை தாக்கி, 9 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றனர். காயமடைந்த ராதா, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.ரவுடிக்கு 256 நாள் சிறைஆவடி: பட்டாபிராம், தண்டுரையைச் சேர்ந்தவர் நவராஜ், 22. இவர், 2019, அக்., 5ல், இனி எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என, பட்டாபிராம் போலீசில் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால், 15ம் தேதி பட்டாபிராம், தெற்கு பஜாரில் உள்ள கடையில் சாப்பிட்டு, பணம் கொடுக்காமல், அதன் ஊழியர் திருப்பதி, 30, என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். கடையின் கண்ணாடியையும் உடைத்துள்ளார். இதையடுத்து, அம்பத்துார் துணை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு, 256 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X