போலீஸ் டைரி..
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2020
06:55

நகை திருடிய மூவர் சிக்கினர்நீலாங்கரை: இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜாவைரமுத்து, 36. இவர், 2019 அக்டோபர், குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 16 சவரன் திருடப்பட்டது. நீலாங்கரை போலீசார் விசாரித்தனர். இதில், கானத்துாரைச் சேர்ந்த அருண்குமார், 27, என்பவர் திருடியது தெரியவந்தது. நகை, பாலவாக்கத்தில் உள்ள, அட்டிகா கோல்டு நிறுவனத்தில் அடகு வைத்ததாக கூறி உள்ளார். அங்கு சென்று விசாரித்தபோது, நிறுவனம், திருட்டு நகையை வழங்க மறுத்துள்ளது. இதனால், அருண்குமார் மற்றும் நகையை ஒப்படைக்காத அட்டிகா கோல்டு நிறுவன மேலாளர் லுாயின் அருளப்பன், 36, ஊழியர் சங்கர், 37, ஆகியோரை, போலீசார், நேற்று கைது செய்தனர்.இருசக்கர வாகனம் திருட்டுஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மணி, 49. இவர் மேற்கு கரிகாலன் தெருவில், தேவாலயம் நடத்தி வருகிறார். தேவாலயம் முன், நிறுத்தியிருந்த இவரது இருசக்கர வாகனம் நேற்று அதிகாலை மாயமாகி இருந்தது. இதையடுத்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடிச் செல்வது தெரிய வந்தது. ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமிக்கு பாலியல் தொல்லைசெம்பியம்: செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், எல்.கே.ஜி., படிக்கும் தங்கள் மகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக, அந்த சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், திரு.வி.க.நகர், கே.சி.கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், 22, என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. அவரை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.மாமூல் வசூலித்த தி.மு.க., பிரமுகர் கைதுதண்டையார்பேட்டை: வியாசர்பாடி, காந்தி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 44; வடசென்னை, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி. நேற்று, தண்டையார்பேட்டை, தாண்டவராயன் சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்ற ரமேஷ், தன்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என, அறிமுகம் செய்து, கடையில் சோதனை செய்துள்ளார்.பின், கடையில் இருந்தவர்களிடம் மாமூல் கேட்டுள்ளார். டீக்கடைக்காரர் பணம் தர மறுக்கவே, இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்து, மாமூல் வசூலில் ஈடுபட்ட ரமேஷை நேற்று கைது செய்தனர்.ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபர்பெரியமேடு: பெரியமேடு - அல்லிக்குளம் இணைப்பு சாலையில், நேற்று முன்தினம் இரவு, 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர், வலது கை தோள்பட்டை, முழங்கை மற்றும் தாடையில் வெட்டு காயத்துடன் சாலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் அடிப்டையில், வாலிபரை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், போலீசார் அனுமதித்தனர். பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X