வாலிபர் இறந்த விபத்து வழக்கு தவறாக பதிவு: மணப்பாறையில் உறவினர்கள் சாலை மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2020
09:49

திருச்சி: வாலிபர் இறந்த விபத்தை தவறாக போலீசார் வழக்கு பதிவு செய்ததைக் கண்டித்து, மணப்பாறை அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டம் நடந்தது.


திருச்சி, மணப்பாறை அருகே உள்ள வேம்பனூரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 21. இவர் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை அவர் வேலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின் சிறிது நேரத்தில் கொடிக்காப்பட்டி என்ற இடத்தில், விபத்தில் சிக்கி காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரை உடலை கைப்பற்றிய விராலிமலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, சதீஷ்குமார் தானாக விழுந்து விபத்தில் சிக்கியதாக விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையறிந்த அவரது உறவினர்கள், 'டிராக்டர் மோதி தான் சதீஷ்குமார் இறந்தார், தானாக விழவில்லை' என்று கூறி, தவறாக வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்து, மணப்பாறை அரசு மருத்துவமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாறை போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வழக்கை முறையாக பதிவு செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் நடந்தது. பின் மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில், உரிய விசாரணை நடத்தி, வழக்கு மாற்றி பதிவு செய்யப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து சதீஷ்குமார் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மணப்பாறை-புதுக்கோட்டை சாலையில், 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


 

Advertisement
மேலும் திருச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X