எதிர்பார்ப்பு!தாம்பரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வாய்ப்பு?:தயார் நிலையில் தானமாக வழங்கப்பட்ட 33 ஏக்கர் நிலம்;சட்டசபையில் அறிவித்து, 'ஸ்கோர்' செய்வாரா முதல்வர்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2020
01:26

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில், சென்னை மாநகராட்சிக்கு மருத்துவமனை அமைக்க, தானமாக வழங்கப்பட்ட, 33 ஏக்கர் நிலம், மெல்ல ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. அந்த நிலத்தை மீட்டு, அரசு மருத்துவ கல்லுாரி அல்லது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை அமைக்கும் அறிவிப்பை, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சியில், அழகப்ப செட்டியார் என்பவர், 33 ஏக்கர் நிலத்தை, சென்னை மாநகராட்சிக்கு தானமாக கொடுத்தார். அந்த இடத்தை, மருத்துவமனை கட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, அவர் தானப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.உரிய பராமரிப்பின்றி இருந்த இடத்தில், சிலர் ஆக்கிரமித்து, 'கிரிக்கெட் அகாடமி' என்ற பெயரில், கட்டணம் வசூலித்து, கிரிக்கெட் பயிற்சி அளித்தனர்.


குழந்தைகள் இல்லம்





அதன்பின், சென்ட், 3 லட்சம் ரூபாய் வரை, இடத்தை விற்பனை செய்யும் முயற்சிகளும் நடந்தன. இதுகுறித்து, நம் நாளிதழ் அவ்வப்போது வெளியிட்ட செய்தியால், சென்னை மாநகராட்சி ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியது.ஆக்கிரமிப்பை தடுக்க, சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டு, 66 லட்சம் ரூபாய் மதிப்பில், தொழுநோய் மருத்துவமனையை, மாநகராட்சி கட்டியது. தொழுநோய் மருத்துவமனைக்கு, டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்படாததால், இன்றுவரை அந்த கட்டடம் பயனற்று கிடக்கிறது.இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் நிலத்தை ஆக்கிரமித்து, 25 சென்ட் நிலத்தில், தனியார் குழந்தைகள் இல்லம் கட்டப்பட்டு, மின் இணைப்பும் பெறப்பட்டுள்ளது. 1 ஏக்கர் பரப்பளவை, விளையாட்டு மைதானமாக, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


இந்த கணக்கீட்டின்படி பார்த்தால், ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களும், கருவேல மரங்களுடன், புதர்மண்டி கிடக்கிறது. ஆக்கிரமித்து குழந்தை இல்லம் நடத்துபவர், அந்த இடத்திற்கு பட்டா கேட்டு, வருவாய் துறையை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த இடத்தின் தென்மேற்கு பகுதியின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு, சமூக விரோத செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.


சென்னைக்கு மிக அருகில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அரசு மருத்துவ மனை கட்ட, 33 ஏக்கர் இடம் தானமாக அளிக்கப்பட்டும், கேட்பாரற்று, நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. இந்த நிலம் குறித்து, புதிதாக பொறுப்புக்கு வரும் மாநகராட்சி கமிஷனர் முதல் அதிகாரிகள் வரை, யாருக்கும் தெரியாமல் இருப்பது தான், வேதனையாக உள்ளது.


சென்னையை பொறுத்தவரையில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள் அனைத்தும், மத்திய மற்றும் வட சென்னை பகுதியில் தான் அமைந்து உள்ளன. தென் சென்னை மற்றும் தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில், போதியளவில் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையே, இன்றளவும் தொடர்கிறது.


சிகிச்சை





செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பின், சிகிச்சை பெற விரும்புவோர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்துார், தாம்பரம், கிண்டி, அண்ணாசாலை என, இரண்டு மணி நேர போக்குவரத்து நெரிசலுக்கு பின் தான், சென்னை ராஜிவ்காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல், பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.


தமிழகத்தின் தலைமை மருத்துவமனையாக கருதப்படும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை யில், தினமும், 12 ஆயிரம் பேர், சராசரியாக சிகிச்சை பெறுகின்றனர். மேலும், 3,000 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுவதோடு, தினமும், 50 முதல், 60 வரையிலான பல்வேறு அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகின்றன. இந்த மருத்துவமனை, 25 ஏக்கர் பரப்பளவிலும், மருத்துவ கல்லுாரி மற்றும் விடுதிகள், 15 ஏக்கர் பரப்பளவில் என, 40 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது.


மாடம்பாக்கத்தில், மருத்துவமனை பயன்பாட்டிற்காக, ஒரே இடத்தில், 33 ஏக்கர் பரப்பளவு நிலம் இருப்பதால், அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனை அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


ஒப்பந்தம்





இதை தவிர, 2019ல், லண்டன் சென்ற முதல்வர் இ.பி.எஸ்., சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அங்குள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை, தமிழகத்தில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர். கிங்ஸ் மருத்துவமனையை, சென்னையில் நிறுவ, மருத்துவமனை நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளது.


எனவே, சென்னையின் மையப்பகுதியில், போதியளவில் மருத்துவமனைகள் உள்ள நிலையில், மருத்துவமனை பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில், தானமாக வழங்கப்பட்ட மாடம்பாக்கம் நிலத்தில், 'கிங்ஸ் மருத்துவமனை' அமைக்க, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஒப்புதல்





அவ்வாறு அப்பகுதியில் மருத்துவமனை அமைக்கப்பட்டால், அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, தென்மாவட்டங்களில் இருந்து வரும் பலரும், போக்குவரத்து நெரிசலின்றி, உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று பயன்பெற முடியும்.


இந்த நிலம் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தானமாக பெறப்பட்ட நிலத்தை, யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆக்கிரமிப்பு செய்ய முடியாது' என்ற வரியில் பதிலளித்தனர்.


சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது. 'தமிழக அரசு மற்றும் மாநகராட்சி ஒப்புதல் அளித்தால், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அல்லது கிங்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்' என்றனர்.

 - நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K S RAJAKUMAR - CHENNAI,இந்தியா
14-பிப்-202022:59:16 IST Report Abuse
K S RAJAKUMAR இன்று தினமலரில் வந்த கட்டுரைக்கு என் பதில் எதிர்பார்ப்பு தாம்பரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வாய்ப்பு? தங்கள் பேப்பரை நிறைய பேர் படிக்கிர்ரகள் . தாங்கள் இது பற்றி எடுத்து சொல்லி டொனேஷன் வாங்கி தரலாம் கல்லுரி கட்ட . அதுற்கு அரசாங்கத்திடம் இருந்து ( எய்த்ட்டி ஜி ) வாங்கி தரலாம். 80 G . நம் ஊரில் ஹாஸ்பிடல் கட்டினாள் அனைவருக்கும் பயன் தரும். நன்றி வணக்கம் ராஜகுமார்.
Rate this:
Share this comment
Cancel
மலைக்கள்ளன் - கடமலைக்குண்டு,இந்தியா
14-பிப்-202012:52:53 IST Report Abuse
மலைக்கள்ளன்  நிலத்தை தானமாக கொடுக்கக்கூட நம் மக்களுக்கோ அரசுக்கோ தகுதி இல்லை .செட்டியார் அவரே பாதி நிலத்தை விற்று மீதி கால் பாதியில் இலவச மருத்துவமனை கட்டி இருக்கலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X