குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கோவையில் பேரணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2020
07:50

கோவை : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக, கோவையில் பா.ஜ., சார்பில் நேற்று நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.




குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ., சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவையில் நேற்று பா.ஜ., இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், பேரணி நடத்தப்பட்டது.கோவை பாரதிபார்க் பகுதியில் துவங்கிய பேரணி, மேட்டுப்பாளையம் ரோடு வழியாக ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.




பேரணியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திச் செல்லப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன. 600 மீ., நீளம், 10 அடி அகலம் கொண்ட தேசியக் கொடி ஏந்திச் செல்லப்பட்டது. சிறுமி ஒருவர் பாரதமாதா போல் வேடமணிந்து தேசியக்கொடியை ஏந்திச் சென்றார்.




முன்னதாக, பேரணியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.பா.ஜ., மாநில செயலாளர் ராகவன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



'அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க.,




'முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில், சமீபத்தில் பா.ஜ., பிரமுகர் ரகு மற்றும் எஸ்.எஸ்.ஐ., வில்சன் கொலை, திருப்பூரில் இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளர் கார் எரிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.சிறையில் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. ஜாமின் வழங்கினால், மீண்டும் கொலைகள் நடக்கும். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, சிறுபான்மை மக்களை தவறாக வழிநடத்தி, தி.மு.க.,வினர் போராட்டத்துக்கு துாண்டி விட்டுள்ளனர். இந்த போராட்டங்கள், அரசியல் ஆதாயங்களுக்காகவும் நடத்தப்படுகின்றன,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X