நெய்வேலி:என்.எல்.சி.,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், மாநில அளவிலான கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 14 வயத்திற்குட்பட்ட பெண்களுக்கான, குடியரசு தின போட்டிகள் நடந்தது.இப்போட்டியில் கடலூர் மாவட்டம் சார்பில் பங்கேற்ற என்.எல்.சி.,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், நாமக்கல் மாவட்டம் விளையாட்டு விடுதி அணியை1: 0 என்ற கோல் கணக்கில்வென்று முதலிடத்தை பிடித்தனர்.மாநில கால்பந்து போட்டியில் என்.எல்.சி.,பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்முதன்முதலாக தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். சாதனை மாணவிகளை என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் பாராட்டினார்.நிகழ்ச்சியில் என்.எல்.சி.,சமூக பொறுப்புணர்வு துறை முதன்மை பொது மேலாளர் மோகன்,பொது மேலாளர் விநாயகமூர்த்தி, கூடுதல் துணை பொதுமேலாளர் காதர் மற்றும் பள்ளி ஆசிரியைகள்கலந்து கொண்டனர்.