| கிருஷ்ணாபுரத்தில் சாலை பணி துவக்கம் Dinamalar
கிருஷ்ணாபுரத்தில் சாலை பணி துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
00:31

புவனகிரி : 'தினமலர்' செய்தி எதிரொலியால், கிருஷ்ணாபுரத்தில் ரூ.32.54 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது.



புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரத்தில் கிராம சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் அப்பகுதியினர் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் கடும் அவதிடைந்தனர்.இதனை சுட்டிக்காட்டி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதையடுத்து புவனகிரி ஒன்றிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க திட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பினர். புவனகிரி எம்.எல்.ஏ., சரவணன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4 லட்சம் மற்றும் பி.எம்.கே.கே.ஒய்., திட்ட நிதி ரூ.28.54 லட்சம் என 32.54 லட்சம் மதிப்பில் 713 மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது.நேற்று துவங்கிய சாலை பணியை குறிஞ்சிப்பாடி உதவி செயற்பொறியளர் ரமேஷ் ஆய்வு செய்தார். புவனகிரி ஒன்றிய பொறியாளர் சுரேஷ், சாலை ஆய்வாளர் கெஜலட்சுமி உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X