மரணித்த மனிதம்! 40 ஆண்டு மரம் அடியோடு சாய்ப்பு: கருவம்பாளையம் மக்கள் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

17 பிப்
2020
02:03
பதிவு செய்த நாள்
பிப் 17,2020 00:58

திருப்பூர்:திருப்பூரில் அனுமதி பெறாமல், நாற்பது ஆண்டு கால மரம் வெட்டப்பட்டது, பொது மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக, போலீசில் 'பெயரளவு'க்கு புகார் கொடுக்கப்பட்டது.திருப்பூரில், பசுமையை உருவாக்கும் நோக்கில், மரக்கன்றுகளை வளர்க்க, தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.


ஒரு பக்கம், மரங்களை வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மற்றொரு பக்கம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வருகின்றன.இதனால், நகரப்பகுதியில் பசுமை காணாமல் போய் வருகிறது.குடியிருப்பு பகுதியில், மின் கம்பிகளில், உரசுவதாகக் கூறி, மரக்கிளைகள் வெட்டப்படுகின்றன. தற்போது, புதிதாக வீடு கட்டுபவர்களும் மரங்களை இடையூறாக நினைத்து வெட்டி வருகின்றனர்.


மரங்களை வெட்ட வேண்டுமென்றால், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறுவதில்லை.கருவம்பாளையம் விரிவு, இரண்டாவது வீதியில், ரேஷன் கடை செயல்படுகிறது. இதன் அருகே, குடியிருப்பு பகுதியையொட்டி, சாலையோரம் இருந்த இலுப்பை மரத்தை, அப்பகுதியில் வசிக்கும் ஒருவர், ஆட்களை கொண்டு, நேற்று, அடியோடு வெட்டினார். மரக்கிளைகளை மட்டும் வெட்டாமல், மரத்தையே வெட்டியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மரம் வெட்டப்பட்டது குறித்து, திருப்பூர் தெற்கு வருவாய் ஆய்வாளர் அன்பரசுவிடம் கேட்டபோது, 'திருப்பூர் டவுன் வி.ஏ.ஓ., குமார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அவர் விசாரணை நடத்தி, திருப்பூர் மத்திய போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்துள்ளார். மரம் வெட்டியவர் யார் என்று விசாரணை நடக்கிறது,' என்றார்.'நாற்பது ஆண்டுகளாக, இப்பகுதியில் மரம் இருந்தது. கிளைகளை மட்டும் வெட்டியிருந்தால், வளர்ந்த பின், நிழல் கிடைத்திருக்கும். முற்றிலும் வெட்டி அகற்றியதால், பயனில்லாமல் போய்விட்டது.


இலுப்பை மரம் உள்பாகம் மிகவும் உறுதி உடையது. நுாறு அடி வரை வளரக்கூடிய மரங்களில் இலுப்பையும் ஒன்று.இம்மரத்தின் பழத்தை வவ்வால்கள் விரும்பி உண்ணும். கொட்டையில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். இதன் விதை மண்ணில் விழுந்தால் அருகிலேயே, செடியாக வளரும் பண்புடையது. இவ்வளவு பலன்களை தரக்கூடிய இம்மரத்தை சற்று யோசிக்காமல்நேற்று வெட்டி எறிந்து விட்டனர்.போலீசில் 'பெயரளவுக்கு' புகார் கொடுத்தால் போதாது. நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ponnusamy - Palladam,இந்தியா
20-பிப்-202012:37:55 IST Report Abuse
Ponnusamy மரங்கள் மழைக்கு ஆதாரம். நம்மால் ஒரு மரத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும், அதை பாதுகாக்கவாவது செய்யலாமே. நம்முடைய வருங்கால சந்ததியினருக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து ஆரோக்கியமான வாழ்க்கை. அதற்கு மரங்கள் எவ்வளவு அவசியம் என்பதை ஏன் இவர்கள் உணரமாட்டேன் என்கிறார்கள். என்று திருந்துவார்களோ.
Rate this:
Cancel
17-பிப்-202006:15:16 IST Report Abuse
ஆப்பு மரத்தை வெட்டி, ஊடு கட்டி, ஆத்தாவுக்கு கெடா வெட்டி சாந்தி பரிகாரம் பண்ணிடுங்க. அப்புறம் 3000 அடிக்கு ஆழ்துளை கிணறு வெட்டி தண்ணி வரலைன்னு அங்கலாய்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X