பனியன் நிறுவன கிரிக்கெட்; கங்கோ, அனுகிரகா அபாரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
00:59

திருப்பூர்:பின்னலாடை நிறுவன அணிகளுக்கான 'நிப்ட்--டீ' பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம் கல்லுாரி மைதானத்தில், கடந்த 9ல் துவங்கியது.வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் போட்டி நடக்கிறது. இரண்டாவது நாள் போட்டி நேற்று நடந்தது. முதல் போட்டியில், டாஸ் வென்ற ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில்ஸ் அணி, பவுலிங் தேர்வு செய்தது. கங்கோ கார்மென்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து, 110 ரன் எடுத்தது.விக்னேஷ் ஜெயக்குமார், 30 பந்துக்கு 39 ரன் எடுத்தார். ஆம்ஸ்ட்ராங் அணி பவுலர்கள் மகேஷ்குமார், கலைகுமார், தலா இரண்டு விக்கெட்; சசிகுமார், அசோக்குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.பின் களமிறங்கிய ஆம்ஸ்ட்ராங் அணி, 14 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 45 ரன்னில் சுருண்டது. 65 ரன் வித்தியாசத்தில், கங்கோ கார்மென்ட்ஸ் வெற்றிபெற்றது.கங்கோ கார்மென்ட்ஸ் பவுலர் குப்புராஜ் மூன்று ஓவருக்கு, 16 ரன் கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அணி அமோக வெற்றிபெற கைகொடுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.மதியம் நடந்த இரண்டாவது போட்டியில், டாஸ் வென்ற புளூபிரீஸ் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. அனுகிரகா அணி, 20 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 131 ரன் எடுத்தது. கிரிநாதன், 17 பந்தில் 31 ரன், ஆனந்த் 24 பந்தில் 25 ரன் எடுத்தார். பின், களமிறங்கிய புளூபிரீஸ் அணி, 20 ஓவரில், ஒன்பது விக்கெட் இழந்து, 73 ரன்னில் ஆட்டமிழந்தது. 58 ரன் வித்தியாசத்தில், அனுகிரகா அணி வெற்றிபெற்றது; கிரிநாதனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.வரும், 23ம் தேதி நடைபெறும் போட்டியில், கேட்டி கார்ப்பரேஷன், -யுனிசோர்ஸ்; டாப்லைன், சுலோச்சனா காட்டன் மில்ஸ் அணிகள் மோத உள்ளன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X