நுாறு ரூபாய் சம்பளம் போதுமா! துாய்மை காவலர்கள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
01:01

பொங்கலுார்:ஊராட்சி பகுதிகளில் வீடுகள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை சேகரிப்பதற்காக, துாய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது விலைவாசி உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில், இதர வேலைகளுக்கு சராசரியாக, 500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.குறைவான சம்பளம் என்பதாலும், அங்கீகாரம் இல்லாத தொழில் என்பதாலும் இந்த பணிக்கு வருவதற்கு தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஒவ்வொரு ஊராட்சியும் துாய்மை காவலர்களை தேடிப்பிடித்து வேலைக்கு சேர்க்கின்றனர்.இதுவரை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் ஊராட்சி நிர்வாகங்கள் செயல்பட்டதால் குப்பை அள்ளும் பணியை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், பல்வேறு கிராமங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தன. குறைவான கூலி என்பதால் துாய்மை காவலர்கள் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தனர்.தற்போது ஊராட்சி நிர்வாகங்கள் மக்கள் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால், அவர்கள் துாய்மை காவலர்களை விரட்டி வேலை வாங்கத் துவங்கியுள்ளனர்.இதனால், வேலை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறைவான சம்பளத்திற்கு வேலை செய்வது தொழிலாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் சொற்பமாக இருப்பதால், இன்றைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, தங்களுக்கு, நகர்ப்புறங்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X