போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
01:05

குளத்தில் மூழ்கி வாலிபர் பலி



திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, காக்களூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் சீனிவாசன், 26. பெற்றோரை இழந்த சீனிவாசன், தன் சித்தப்பா ஜெகதீசனுடன் வசித்தார்.நேற்று முன்தினம் காலை, அப்பகுதி தாமரைக் குளத்தில் குளித்தபோது, எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கினார்.பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து வந்த, திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள், ஆறு பேர், 2 மணி நேர தேடலுக்கு பின், சீனிவாசன் இறந்த நிலையில், சடலத்தை மீட்டனர். திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.



சீட்டு ஆடிய மூவர் சிக்கினர்



செவ்வாப்பேட்டை: செவ்வாப்பேட்டை அடுத்த, திருவூர் பகுதியில், செவ்வாப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம், ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது, அப்பகுதியில் உள்ள முட்புதர் ஓரம், பணம் வைத்து சீட்டு விளையாடிய, கருணாகரன் மகன் அசோக்குமார், 26, முத்து மகன் முரளி, 34, பார்த்திபன் மகன் பிரேம்குமார், 40, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.



மணல் கடத்திய ஓட்டுனர் பிடிபட்டார்



திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, விடையூர் பகுதியில், கொசஸ்தலை ஆற்றில், நேற்று முன்தினம், மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ரோந்து சென்றனர்.அப்போது, ஆற்றுப்பகுதியில் இருந்து மணலை அள்ளி, லாரி ஏற்றிய, அதே பகுதி ராஜேந்திரன் மகன் சுரேஷ், 32, என்பவரை, போலீசார் கைது செய்தனர்; லாரியை பறிமுதல் செய்தனர்.ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றியம், ஒதப்பை அருகே, பென்னலுார்பேட்டை போலீசார், வாகன சோதனை நடத்தினர். கொசஸ்தலை ஆற்றில் இருந்து அவ்வழியே வந்த, 'டாடா ஏஸ்' வாகனத்தை பிடித்தனர். போலீசாரை பார்த்ததும், ஓட்டுனர் தப்பிவிட்டார். மணல் மூட்டைகளுடன், டாடா ஏஸ் வாகனத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.



இரு இளம்பெண்கள் மாயம்



ஊத்துக்கோட்டை: வெங்கல் அடுத்த, பாஷிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி மகள் கமலி, 19; பி.பார்ம்., முடித்து, உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தார்.கடந்த, 13ம் தேதி, வெளியூர் சென்ற பெற்றோர், அன்று மாலை வீடு திரும்பியபோது, கமலி வீட்டில் இல்லை; உறவினர்கள் வீடுகளில் தேடியும், அவர் கிடைக்கவில்லை.மகள் காணாமல்போனது குறித்து, மூர்த்தி அளித்த புகாரை, வெங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல், பூண்டி ஒன்றியம், ஆட்ரம்பாக்கத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் மகள் பாரதி, 19. இவருக்கு, பெற்றோர், திருமண ஏற்பாடு செய்து வந்தனர்.வீட்டில் இருந்த பாரதியை, 14ம் தேதி முதல் காணவில்லை என, பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பென்னலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.



ஆடு திருடிய இருவருக்கு, 'கம்பி!'


வல்லம்: செங்கல்பட்டு அடுத்த, வல்லம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி ருக்மணி, 65. இவர், வீட்டின் அருகில், கொட்டகை அமைத்து, ஆடுகள் வளர்க்கிறார்.அதே பகுதியைச் சேர்ந்த நவீன்ராஜ், 21, பிரதிப்குமார், 22, ஆகியோர், மூதாட்டி வீட்டிலிருந்து இரண்டு ஆடுகளை, நேற்று, திருடிச் சென்றனர்.இது குறித்து, ருக்மணி அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார், நவீன்ராஜ், பிரதிப்குமாரை கைது செய்தனர்.லாரி மோதி வாலிபர் மரணம்செங்கல்பட்டு: திருப்போரூர் அடுத்த, ஏகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் கணேசன், 26. செங்கல்பட்டிலிருந்து, 'யமஹா' இருசக்கர வாகனத்தில், நேற்று, வீட்டிற்கு சென்றார்.பொருந்தவாக்கம் அருகில், எதிரே வந்த, 'டாரஸ்' லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.சிறுமியை கடத்த உதவிய 6 பேர் கைதுஉத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி, 10ம் தேதியில் இருந்து காணவில்லை.சிறுமியின் தந்தை, உத்திரமேரூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தன் மகளை, பூந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், 19, என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என, தெரிவித்திருந்தார். இதையடுத்து விசாரித்த போலீசார், சிறுமி கடத்தப்பட்டதை அறிந்தனர்.சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக, ராஜேஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என, ஆறு பேரை, போலீசார் கைது செய்து, ராஜேஷை தேடுகின்றனர்.192 பீர் பாட்டில்கள் பறிமுதல்திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள, அரசு மதுக்கடை பாரில், 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., கல்பனாதத் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சத்தியவாணி தலைமையிலான மதுவிலக்கு அமலாக்க போலீசார், மேற்கண்ட கடையில், திடீர் சோதனை நடத்தினர்.அங்கு, அனுமதியின்றி, 16 அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த, 192 பீர் பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய். மது விற்றது சம்பந்தமாக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 47, என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X