விழுப்புரம் நகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு... தேவை! பொது மக்கள் திணறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
01:07

விழுப்புரம் : விழுப்புரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண வழியின்றி அதிகாரிகள் மட்டுமின்றி போலீசாரும் திணறி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வாகன நிறுத்துமிடங்களை முறைப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்புகளாக உள்ளது.



விழுப்புரம் நகரில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் பிரச்னை என்பது தொடர் கதையாகவுள்ளது. இதில், குறிப்பாக, விழுப்புரம் நகர் பகுதி வாகனங்களும், புதுச்சேரி, கடலுார், பண்ருட்டி வழித்தட வாகனங்கள் செல்லும் நேருஜி சாலையில், நான்கு முனை சிக்னல் துவங்கி, ரயில்வே மேம்பாலம் வரையிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை.



நேருஜி சாலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலையோர கால்வாய், சாலை விரிவாக்க பணிகள் தற்போது முற்றிலுமாக முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் முடிவடையும் நிலையில் இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் குறையாமல் மேலும், அதிகரித்த நிலையிலேயே உள்ளன. சாலை மையத்தில் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.



இதனால், காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் வாகனங்கள் முன்னேறி செல்ல வழியின்றி, நெரிசலில் சிக்கி ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும், பணிக்கு செல்வோரும், பொதுமக்கள் பலரும் அதில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். நேருஜி சாலையில் விதிமீறி அதிகளவில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்புக்கு, கூடுதல் காரணங்களாக உள்ளது. விழுப்புரம் நகரில், 40 ஷேர் ஆட்டோக்களுக்கு மட்டுமே வட்டார போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.



ஆனால், நுாற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், நான்கு சக்கரம், மூன்று சக்கர ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதில், பெரும்பான்மையானவை நெரிசல் மிகுந்த நேருஜி சாலையில் மட்டுமே, திரும்ப, திரும்ப இயக்கப்படுவதால் மேலும் நெரிசல் அதிகரிக்கிறது.பயணிகள் கை காட்டும் இடங்களில் சாலையிலே நிறுத்துவதும், ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் வரிசையாக அணிவகுப்பதும் வாடிக்கையாகவுள்ளது.



இது தவிர, விழுப்புரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகிறது. பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரயில் நிலைய பகுதிகளில் ஆட்டோ நிறுத்தங்களுக்கு பின், தற்போது பல ஆட்டோ நிறுத்தங்கள் அனுமதியின்றி உருவாகியுள்ளது.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பெரிய ஆட்டோ நிறுத்தம் உள்ளன. இதற்கு எதிரே சுதாகர் நகர் சாலை முகப்பில், அங்கு ஒரு ஆட்டோ நிறுத்தமும், அருகே பஸ் நிலைய நிழற்குடை இருப்புறங்களில் ஆட்டோ நிறுத்தமும், நீதிமன்றம் அருகே ஒரு ஆட்டோ நிறுத்தமும் இயங்குகின்றது.விழுப்புரம், சிக்னல் பகுதியில் நான்கு புறமும் ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் நிறுத்தப்படும் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் போக்குவரத்து நெரிசலை பற்றி துளிக்கூட கவலைப்படுவதில்லை.



வாகன ஓட்டிகள், தள்ளி நிறுத்த கூறினாலும், தகராறு செய்யும்நிலை தான் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எதிரேவுள்ள மாம்பழபட்டு சாலையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.அதே போல், நேருஜி சாலையில் சண்முகபுரம் காலனி சந்திப்பு, பூந்தோட்டம் பாதை, பழைய பஸ் நிலையம், கே.கே., ரோடு சந்திப்பு, நகராட்சி அலுவலகம் எதிரே, காந்தி சிலை, தி.மு.க., அலுவலகம் எதிரே, ரயில் நிலையம் என தொடர்ச்சியாக ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன.



பஸ் நிலையங்களை தவிர்த்து பிறவற்றிற்கு அனுமதி இல்லை எனக்கூறும் போலீசாரும், நகராட்சி நிர்வாகமும் இந்த பிரச்னையை தீர்க்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் சாதாரண நாட்கள் மட்டுமின்றி, விழா காலங்களிலும் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் உள்ள போலீசார் திணற வேண்டிய நிலையுள்ளது. நெடுஞ்சாலைகளில் அரசியல் கட்சியினரின் பேரணிக்கு அனுமதிப்பதும், இருசக்கர வாகன நிறுத்தங்கள் முறைப்படுத்தாததும், கண்டபடி சாலையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதும் நெரிசலுக்கு காரணமாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திண்டிவனம், திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி போன்ற சிறு நகரங்களில் கூட ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.



மாற்று சாலை வசதிகள் இருந்தும், விழுப்புரத்தில் இதற்கான நடவடிக்கைகள் உறுதியோடு எடுத்து, கடைபிடிக்கவில்லை.ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலனை கருதி, இந்த வாகனங்களை கடந்த காலங்களை போல, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, பெரியார் நகர் வரையிலும், புதிய பஸ் நிலையம் முதல் கம்பன் நகர் வரையிலும், நான்குமுனை சந்திப்பில் இருந்து முத்தாம்பாளையம் புறவழிச்சாலை வரையிலும் என தனித்தனியாக பிரித்து இயங்கும் படி செய்யலாம்.



இதே போல், ஆட்டோ நிறுத்தம், இருசக்கர வாகன நிறுத்தங்களை முறைபடுத்தி நெரிசலை குறைக்கலாம். இதை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒருவழி பாதையும் 'அவுட்'விழுப்புரம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், முதற்கட்டமாக காவல் துறை சார்பில், காமராஜர் சாலையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் ஒருவழி பாதை முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பு பேனர்கள் சாலையின் இருபுற முகப்புகளில் பேரிகார்டுகளில் ஒட்டப்பட்டுள்ளது.



இந்த ஒருவழி பாதை துவங்கி, சில தினங்கள் மட்டுமே கண்காணித்த போலீசார் பின், அதை கவனிக்க தவறிவிட்டனர். இதனால், காவல் துறையின் அறிவிப்பை மீறி, காமராஜர் சாலையில், நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒருவழி பாதை திட்டத்தை போலீசார் சரிவர கண்காணிக்கும் பணிகளை செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X