28 டன் அரசி மூட்டைகள் பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
01:08

சோழவரம்: செங்குன்றம் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஆந்திர மாநிலத்திற்கு கடத்தயிருந்த, 28 டன் தமிழக ரேஷன் அரிசி மூட்டைகளை, பறிமுதல் செய்தனர்.



இது சம்பந்தமாக, இருவரை கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அலமாதி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலத்திற்கு, தமிழக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, சோழவரம் போலீசார், செங்குன்றம் - -திருவள்ளூர் சாலையில், காந்தி நகர் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அலமாதியில் இருந்து, ஆந்திரா நோக்கி சென்ற, ஆந்திர மாநில பதிவு எண் உடைய லாரியை மறித்தனர்.போலீசார் சோதனை மேற்கொண்டதில், லாரியில், தமிழக ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இவற்றின் எடை, 28 டன்.இதையடுத்து, லாரியையும், அரிசி மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட, நெல்லுாரைச் சேர்ந்த காசிரெட்டி, 62, ரத்திரனம், 45, ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரிடம், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வழக்கமாக, ரயில், ஆட்டோ, மினிலாரி உள்ளிட்டவற்றில், 1 டன் அல்லது 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளே கடத்தப்படும். தற்போது, ஒரு லாரி முழுவதும், மூட்டைகள் எடுத்து வரப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டவையா அல்லது அரசு கிடங்குகளில் இருந்து நேரடியாக எடுத்து வரப்பட்டவையா என, சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X