திருமண உதவித்தொகை திட்ட பயனாளிகள் தேர்வு: விதிமுறைகளில் பாகுபாடின்றி செயல்பட கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
02:11

உடுமலை:திருமண உதவித்தொகை திட்டங்களில் பயனாளிகள் தேர்வு செய்வதில், பயனாளிகளை தேர்வு செய்யும் விதிமுறைகளில் பாகுபாடில்லாமல் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்த காலங்களில், அரசு நலத்திட்டங்களில் பலவற்றிலும், தகுதியில்லாதவர்களும் பயன்பெறும் நிலை இருந்தது.திருமண வயதை எட்டும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் உள்ளது. திட்டத்தில், பத்தாம் வகுப்பு வரை முடித்தவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டு பிரிவினருக்கும், ஒரு பவுன் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.ஒன்றிய அலுவலகங்களில், இதற்கான விண்ணப்பங்கள் பெற்று, சேவை மையங்களில், ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.திட்டத்தில் பயன்பெற தகுதியில்லாத நிலையிலும், அரசியல் பிரதிநிதிகள் சிபாரிசுக்கு வருவதும், அலுவலர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்திய அவலமும் தொடர்ந்தது. பொருளாதார வசதியிருந்தும், பலரும் திட்டத்தில் பயன்பெற்று வந்தனர்.திட்டத்தில் பயன்பெறுவோரின் பெற்றோருக்கான ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாயாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும், திருமணத்துக்கு முன்பு, 40 நாட்களுக்குள் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இதில், பலரும், சிபாரிசுகளை பயன்படுத்தி, திருமணம் முடிந்த பின்னர், விண்ணப்பிப்பது மற்றும் ஆண்டு வருமானம் அதிகமாக இருப்பினும் திட்டத்தில் பயன்பெற செயல்படுவதும் தொடர்ந்தது.தற்போது, விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமானம், 72 ஆயிரமாக இருந்தால் மட்டுமே, ஆன்-லைனில் விண்ணப்பங்கள் பதிவாகின்றன. வருமானச்சான்றிதழ் வழங்குவதில், அலுவலர்கள் கடுமையாக இருக்க வேண்டுமென சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், வருமான சான்றிதழ் வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக ஆய்வு நடத்திய பின்னர் வழங்கி வந்தனர்.உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் இத்திட்டங்களில் கட்சிகளின் தலையீடு குறைந்திருந்ததால், அலுவலர்களும், திட்டத்தை செயல்படுத்துவதில் 'கறாராக ' செயல்பட்டனர்.தற்போது, மீண்டும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக அரசியல் கட்சியினர்கள் பொறுப்பேற்றுள்ளதால், திட்டத்தில் குளறுபடிகள் அதிகரிப்பதற்கான நிலை மீண்டும் தலைதுாக்கியுள்ளது.இதனால் தகுதியுள்ள பயனாளிகளுக்கு மட்டுமே திட்டத்தை கொண்டு சேர்க்க, மாவட்ட நிர்வாகம் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X