நகரில் போக்குவரத்து விதிமீறல் ஏராளம்: பொதுமக்களுக்கு இடையூறு தாராளம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
02:11

உடுமலை:உடுமலை நகரில் ரோடுகளை ஆக்கிரமிக்கும் போக்குவரத்து விதிமீறல்களால், பொதுமக்கள் இடையூறுக்கு ஆளாகின்றனர்.உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதில், பஸ் ஸ்டாண்டு அருகிலுள்ள, சீனிவாசா வீதி, பசுபதி வீதி, வ.உ.சி., வீதி, சத்திரம் வீதி மற்றும் சரவணா வீதி, கல்பனா ரோடு, கச்சேரி வீதி, உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள் அதிகம் உள்ளன.பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடமாகவும் இப்பகுதிகள் உள்ளன. மேலும், மருத்துவமனைகளும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பரப்பரப்பான காலை, மாலை நேரங்களில், பொதுமக்களுக்கு இடையூறாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி நடக்கின்றனர்.பரபரப்பான நேரங்களில் சரக்கு வாகனங்கள் இந்த வீதிகளின் வழியே செல்ல அனுமதி கிடையாது. ஆனால், லாரி, டெம்போ போன்ற சரக்கு வாகனங்கள், மக்கள் நடமாட்டம் அதிமுள்ள நேரத்தில் தான் பொருட்களை ஏற்றுவதும் இறக்கவும் செய்கின்றனர்.இதனால், நீண்ட நேரம், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், வரிசையில் காத்திருக்கின்றன. மேலும், ரோட்டோரங்களை தவிர, வாகனங்களை வேறு எங்கும் நிறுத்தக்கூடாது என்பதால், நகராட்சியின் சார்பில், வணிக வளாக வீதிகளில், இரண்டு புறமும் சணல் கயிறு போட்டு அடையாளம் போடப்பட்டது.ஆனால், தற்போது, அவ்வாறு எந்த விதிகளையும் மதிக்காமல், கார்களைகளையும், வாகனங்களையும், தாறுமாறாக நிறுத்திக்கொள்கின்றனர்.மருத்துவமனை அமைப்பதற்கு, முறையான 'பார்க்கிங்' வசதியும் அவசியம். சரவணா வீதி மற்றும் வெங்கடகிருஷ்ணா ரோடுகளில், வாகனங்கள் நிறுத்துவதற்கான 'பார்க்கிங்' வசதியில்லாமல், ரோட்டில் நிறுத்துகின்றனர்.வ.உ.சி., ரோடு குறுகலாக இருக்கும் நிலையில், சரக்கு வாகனங்கள் இவ்வழியாக வரும் போது அடிக்கடி வளைவுகளில் சிக்கிக்கொள்கிறது. மேலும், இவ்வாறு சரக்கு வாகனங்கள் வரும் போது, எதிரே வரும் வாகனங்கள் ஒதுங்கி நிற்கவும் முடியாமல் உள்ளன.இதனால், பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். பிரதான ரோடுகளை பார்வையிடுவது மட்டுமின்றி, இந்த விதிமீறல்களையும் கட்டுபடுத்த போக்குவரத்து போலீசாரும், 'பார்க்கிங்' வசதியில்லாத மருத்துவமனைகளில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X