அடிக்கடி தோண்டும் பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
02:15

ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், கருணீக்கர் தெருவில், பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னைக்காக, அடிக்கடி பள்ளம் தோண்டப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.



ஆதம்பாக்கத்தில், கருணீக்கர் தெரு அமைந்துள்ளது. குட்டி ரங்கநாதன் தெரு என அழைக்கப்படும் இச்சாலையில், ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், வங்கி, பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன.ஆதம்பாக்கம், உள்ளகரம், வாணுவம்பேட்டை பகுதிமக்கள், ஜி.எஸ்.டி., சாலையை அடைய பிரதான வழித்தடமாக, இந்த தெரு விளங்குகிறது.இத்தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், பள்ளம் தோண்டி சீர்செய்து வருகின்றன. ஒரு முறை பள்ளம் தோண்டினால், குறைந்தபட்சம் அச்சாலையை சீரமைக்க, மூன்று மாதங்கள் ஆகின்றன.



கடந்த ஓராண்டில், இதுவரை, ஐந்து முறை பள்ளம் தோண்டி பாதாள சாக்கடை சீரமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மீண்டும் கருணீக்கர் தெருவில் பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.இதனால், வியாபாரிகளுக்கு வர்த்தகம் பாதிக்கப் படுவதோடு, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.எனவே, சம்பந்தப்பட்ட குடிநீர், கழிவுநீர் அகற்று வாரியத்தின் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X