ஆண்டவன் கட்டளை! கோவில் நிலங்களை மீட்டெடுக்க அதிரடி நடவடிக்கை.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
02:27

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே பழமை வாய்ந்த கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதில், முதற்கட்டமாக சிஞ்சுவாடி கோவில் நிலங்கள், விற்பனைக்கு வந்தால் பதிவுத்தடை செய்ய வேண்டும் என, கோமங்கலம் சார் பதிவாளருக்கு, இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.பொள்ளாச்சி அருகே உள்ள சிஞ்சுவாடி பாளையப்பட்டு, ஜம்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட, வரதராஜப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், மாலப்பட்டி பெருமாள் கோவில், விநாயகர், சிறுதுண்டி அம்மன் கோவில்களுக்கும் நிலங்கள் வழங்கப்பட்டன.இந்த கோவில்களின் சிஞ்சுவாடி, கோலார்பட்டி, தென்குமாரபாளையத்தில் உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலங்களை மீட்டு, கோவில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்து, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.நிலங்களை குத்தகைக்கு, பொது ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் வருவாயில், கோவில் பாதுகாப்பு, புனரமைப்பு, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களின் நிலை மற்றும் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பின் ஆக்கிரமிப்பு அகற்ற உரிய நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில், சிஞ்சுவாடியில் உள்ள கோவில்களின் பெயரில் உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.இதற்காக செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை கோவில்களிடம் ஒப்படைக்க கோரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக கோவில் நிலங்களை மீட்டெடுக்கும் வகையில் கோமங்கலம்புதுார் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு, கோவில் நிலங்கள் விற்பனைக்கு வந்தால், பதிவுத்தடை செய்ய வேண்டும் என, இந்து சமய அறநிலையத்துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அந்த கடிதத்தில், 'சிஞ்சுவாடி கிராமத்துக்கு உட்பட்ட இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான, புஞ்சை நிலங்கள் தொடர்பாக விற்பனைக்கோ, பாராதீனத்திற்கோ (அடமானம், குத்தகை, கிரயம்) வந்தால் பதிவுகள் செய்ய வேண்டாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவில் நிலங்கள் (ஏக்கரில்):சிறுதுண்டி அம்மன், 3.70 ஏக்கர் மற்றும் வரதராஜப் பெருமாள், 23.50, விநாயகர் கோவில், 12.16 மற்றும், 8.94; மாரியம்மன், 26.34 மற்றும், 1.56, சிறுதுண்டி அம்மன், 3.70 என மொத்தம், 79.9 ஏக்கர் நிலங்கள் (புல எண்ணுடன்) குறிப்பிட்டு தனித்தனியாக கோவில் பெயருடன் கடிதம் அனுப்பியுள்ளனர்.கும்பாபிஷேகம் நடத்தணும்!பொதுமக்கள் கூறுகையில், 'பழமை வாய்ந்த கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலதாமதப்படுத்தாமல் உடனடியாக கோவில் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும். அதிகாரிகள் முழு முயற்சி மேற்கொண்டு, கோவில் நிலங்களை மீட்டெடுத்து குத்தகைக்கு விட வேண்டும். இதன் மூலம் கோவிலுக்கு வருமானம் கிடைப்பதால் தினமும் பூஜைகள் நடத்த வாய்ப்பு ஏற்படும். மேலும், பராமரிப்பு செய்து, கும்பாபிேஷகம் நடத்தவும் முடியும். அதிகாரிகள் விரைவில் நிலங்களை மீட்டெடுத்து கோவில்கள் பராமரிக்க முயற்சி மேற்கொள்வர் என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X