ரயிலில் பெண் பயணியருக்கு போலீஸ் பாதுகாப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
02:37

சென்னை: ரயிலில் பெண் பயணியருக்கு, மாறுவேடத்தில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து, எழும்பூரில் உள்ள, ரயில்வே போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதாவது:ரயில் பயணத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக, 2015ம் ஆண்டில் இருந்து, 2019 வரை, 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 109 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 89 வழக்குகளில், 15ல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளன. 55 வழக்குகளில் புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.தமிழக ரயில்வே போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவின்படி, எக்ஸ்பிரஸ் மற்றும் பயணியர் ரயில்களில், பெண்கள் பெட்டிகளில், ரயில்வே பெண் போலீசார், சாதாரண உடையில் பயணியை போல், பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிலையங்களில் மற்றும் ரயில்களில், பெண் பயணியருக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக, விழிப்புணர்வு பிரசாரம், அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக, பயணியரால் புகார் தெரிவிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட ரயிலில் பயணம் செய்யும் ரயில்வே போலீசாரும், அருகில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களும், புகார்தாரரை அணுகி, அவரிடமிருந்து, புகாரை பெற்று, வழக்கு பதிவு செய்ய வேண்டும்.எக்காரணத்தாலும், புகார்தாரரை ரயிலில் இருந்து, கீழே இறக்கக்கூடாது.அனைத்து, உட்கோட்டங்களிலும், பெண் சப் - இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டு, பெண்கள் பெட்டியில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க, தீவிர ரோந்து பணி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரயில்வே போலீஸ் உதவி மையத்துக்கு, '1512' என்ற எண்ணுக்கும், 99625 00500 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X