புற்றுநோய் பாதித்த 5 வயது சிறுவன்: சிகிச்சைக்கு பணமின்றி பெற்றோர் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
09:19

பெரம்பலூர்: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 5 வயது சிறுவனின் சிகிச்சைக்கு பணமின்றி, பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.


பெரம்பலூர், புதிய மதனகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள், ராஜு - ராஜேஸ்வரி தம்பதி. ராஜு, வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளி. தாய் ராஜேஸ்வரி, வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் சாய்ராம், 5; பிறந்தது முதல், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாய்ராமுக்கு, அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோர் மிகவும் சிரமப்பட்டு, இதுவரை, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி சிகிச்சை அளித்துள்ளனர். தாங்கள் வைத்திருந்த நகை, பொருட்கள் என அனைத்தையும் விற்று விட்டனர். இவர்களின் நிலை அறிந்த ஒருவர், தன் பழைய ஓட்டு வீட்டை, இவர்களுக்கு, 150 ரூபாய் வாடகைக்கு விட்டுள்ளார். மாதந்தோறும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று வரவும், கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமலும், சாய்ராமின் குடும்பம் அவதிப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாய்ராமுக்கு காலில் ஆப்பரேஷன் செய்ய வேண்டும் எனவும், அதற்கு, 3 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


ராஜேஸ்வரி கூறியதாவது: நான், என் அம்மா வைத்திருந்த நகை, என் சித்திகள் உள்ளிட்ட உறவினர்களிடம் இதுவரை, 5 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, செலவு செய்து விட்டேன். என் மகனின் கால் பாதம் வளைந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு லட்சக்கணக்கில் செலவாகும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். என் மகனை காப்பாற்ற, தமிழக அரசும், நல்ல உள்ளம் படைத்தவர்களும் உதவ வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். உதவ விரும்புவோர், 96009 - 59257 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவர்களது, யூனியன் வங்கி சேமிப்பு கணக்கு எண்: 637402010004538.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X