சிவகங்கை நகராட்சிக்கு குடிநீர், வீட்டு வரியை கட்டுங்க... சம்பளம் எடுக்க முடியாமல் திணரும் நிர்வாகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
00:03

சிவகங்கை : எந்த ஒரு அரசு அலுவலகமும் மக்களின் பங்களிப்பு, ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும். மக்களுக்கான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களை வழங்கும் சிவகங்கை நகராட்சிக்கு முறையாக குடிநீர், வீட்டு வரியை கட்டினால் தடையின்றி அரசு திட்டங்களை அதிகாரிகள் செயல்படுத்த ஏதுவாக இருக்கும்.



சிவகங்கை நகராட்சியில் உள்ள 26 வார்டுகளின் கீழ், 15 ஆயிரம் வீடுகளில் 45 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். இது தவிர கலெக்டர் அலுவலகம், பிற அரசு அலுவலகம், வியாபாரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பெயரில் மட்டுமே 'சீமையாக' இருக்கிறது. குக்கிராமம் போல் எவ்வித வளர்ச்சி இன்றி காணப்படுகிறது.



வளர்ச்சி என்பது மாவட்டம் பிரிந்ததில் இருந்து ஏற்படவில்லை. இது போன்ற நிலையில் நகராட்சிக்கு குடிநீர், வீட்டு வரி, பிளான் அப்ரூவல் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே அலுவலர், சுகாதார ஊழியர் சம்பளம், மின்விளக்கு பராமரிப்பு போன்ற அடிப்படை செலவினங்களை செய்ய முடிகிறது. சிவகங்கை நகர் மக்கள் முறையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர், வீட்டு வரியை முறையாக கட்டுங்க என நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக, நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.



குடிநீர் வரி ரூ.1 கோடி பாக்கி:



நகராட்சி வருவாய் பிரிவு அலுவலர்களின் மெத்தனப்போக்கால், கடந்த 7 ஆண்டாக குடிநீர் வரியாக ரூ.1 கோடி வரை வசூலிக்காமல் பாக்கி வைத்துள்ளனர். மக்களும் மனமுவந்து குடிநீர் வரியை கட்டவில்லை. இங்குள்ள 6 ஆயிரம் குடிநீர் இணைப்புகளுக்கு தினமும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் காவிரி கூட்டு குடிநீர் 25 லட்சம் லிட்டர் வரை பெற்று வினியோகிக்கின்றனர். இதற்காக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி பணம் செலுத்துகிறது. அதற்கேற்ப ஆண்டுதோறும் குடிநீர் வரியை மக்கள் செலுத்தவில்லை. இதனால் கடந்த 7 ஆண்டில் குடிநீர் வரி மட்டுமே ரூ.1 கோடி வரை பாக்கி உள்ளது.



வீட்டு வரி வசூல் ரூ.1.50 கோடி:



நகரில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு ஆண்டு தோறும் வீட்டு வரி மூலம் ரூ.1.50 கோடி கிடைக்கிறது. வீட்டு வரியை மக்கள் உடனுக்குடன் கட்டி விடுகின்றனர். ஆனால், குடிநீர் வரியை மட்டும் செலுத்த முன்வரவில்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.வரியை முறையாக கட்டினால் தான், அடிப்படை வசதிகளை செய்து தராவிடில், மக்கள் அதிகாரிகளை கேள்வி கேட்க முடியும் என்பதை உணர்ந்து, தவறாமல் வரி கட்ட வேண்டும்.



மக்கள் ஒத்துழைப்பு தாருங்கள்:



நகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது, நகராட்சியில் வளர்ச்சி பணிகளை செய்ய, வரிகளை செலுத்துமாறு மக்களிடம் வீடு வீடாக சென்று கோரிக்கை வைத்து வருகிறோம். மக்கள் மனமுவந்து குடிநீர் உள்ளிட்ட வரிகளை செலுத்தினால் நன்று. பல முறை தெரிவித்தும் வரி செலுத்தாததால் தான் 10 வீடுகளில் குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளோம். குடிநீர் இணைப்பை துண்டிப்பது எங்கள் நோக்கம் அல்ல.மக்கள் முறையாக குடிநீர் வரியை செலுத்தினால் தான், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பணத்தை வழங்க முடியும், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X