மாமியாரை கொலை செய்த மருமகள் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
00:39

குடும்ப தகராறு காரணமாக, ஆதம்பாக்கத்தில், மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகளை, போலீசார் கைது செய்தனர்.


சென்னை ஆதம்பாக்கம், கணேஷ் நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 54. இவரது மனைவி சரஸ்வதி, 48. சரவணனின் தாய் சுலோசனா, 77. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.சரஸ்வதி மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர். இதற்காக, 2005, 2010 ஆகிய ஆண்டுகளில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்.சரஸ்வதி மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதால், சரவணனை, சுலோசனா கவனித்து வந்தார்.


இது, சரஸ்வதிக்கு பிடிக்கவில்லை.நேற்று முன்தினம் இரவு, இது தொடர்பாக, சுலோசனாவுக்கும், சரஸ்வதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சரஸ்வதி, சமையல் அறையில் இருந்த டப்பாவை, மாமியார் மீது வீசினார்.இதில், நிலை குலைந்து விழுந்த அவரை, கத்தியால் இடுப்பு, கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடித்த சுலோசனா, சம்பவ இடத்திலேயே இறந்தார்.பணி முடித்து வீடு திரும்பிய சரவணன், தாய் கொலை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் கொடுத்த புகாரின் படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, சரஸ்வதியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X