போலீஸ் டைரி 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
00:48

மாயமானவர் பிணமாக மீட்புபுல்லரம்பாக்கம்: திருவள்ளூர் அடுத்த, பூண்டியைச் சேர்ந்தவர், தெய்வவினாயகம் மகன் சுப்ரமணி, 78. இவர், கடந்த மாதம், 23ம் தேதி, திருப்பதி செல்வதாக கூறிச் சென்றவர், பின் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில், நேற்று முன்தினம், பூண்டி காட்டு பகுதியில், மாடு மேய்க்கச் சென்றவர்கள், இறந்த நிலையில், சுப்ரமணியை பார்த்துள்ளனர். தகவல் அறிந்ததும், உறவினர்கள் சென்று பார்த்த போது, இறந்து கிடந்த, சுப்ரமணியின் உடல் அருகில், விஷ பாட்டில் ஒன்று கிடந்தது. இது குறித்து, புல்லரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.



கஞ்சா வியாபாரிக்கு, 'காப்பு'பட்ரவாக்கம்: செங்கல்பட்டு அடுத்த, பட்ரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், வினோத்குமார், 32; கஞ்சா வியாபாரி.செங்கல்பட்டு பகுதியில், நேற்று, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது, ரோந்து பணியில் இருந்த போலீசார், வினோத்குமாரை பிடித்தனர். அரை கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், வினோத்குமாரை கைது செய்தனர்.



வாலிபர் தற்கொலைகூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த, காரணைபுதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர், ரமேஷ், 35. இவருக்கு, மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.தம்பதி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், மனைவி, பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.இதனால் மனமுடைந்த ரமேஷ், 16ம் தேதி, பூச்சி மருந்து குடித்து, வீட்டில் மயங்கி கிடந்தார். அருகாமை வீட்டார் மீட்டு, பொத்தேரியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.



அங்கு, சிகிச்சை பலனின்றி, ரமேஷ், நேற்று இறந்தார். வாலிபரிடம் மொபைல் போன் பறிப்புமறைமலை நகர்: மதுராந்தகம் அடுத்த, மொரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரக்கோட்டி, 27; தனியார் நிறுவன ஊழியர்.நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக, மறைமலை நகர் பஸ் நிறுத்தத்தில் நின்றார்.அப்போது, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணிந்து வந்த இருவர், ருத்ரக்கோட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4,000 ரூபாய் மற்றும் விலை உயர்ந்த மொபைல் போனை பறித்து சென்றனர். மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



பணம் பறித்தவருக்கு, 'கம்பி'காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி பகுதியில், பழ ஜூஸ் கடையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த புஞ்சியநாத், 20, என்பவர் பணிபுரிகிறார்.நேற்று முன்தினம், பை - பாஸ் சாலையில் நடந்து சென்ற இவரை, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மறித்து, கத்தியை காட்டி மிரட்டினார். பின், புஞ்சியநாதிடம் இருந்த, 450 ரூபாயை பறித்து சென்றார்.இது குறித்த புகாரை விசாரித்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், கோவிந்தவாடி அகரத்தைச் சேர்ந்த சுதாகர், 23, என்பவரை கைது செய்தனர்.



சுதாகர் மீது, பல வழக்குகள் உள்ளன.தீ விபத்தில் வாலிபர் இறப்புகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, மேல்கதிர்பூர் காலனியைச் சேர்ந்தவர், ஜெகதீசன், 28. குடிசையில் வசித்த இவர், 16ம் தேதி இரவு, இவரது குழந்தை அழுததால், பம்பு அடுப்பை பற்றவைத்து, பால் காய்ச்சினார். இவரது மனைவி மோகனபிரியா, குழந்தையை துாக்கிக்கொண்டு, வெளியே வந்தார்.அப்போது, அடுப்பு தீ பற்றியதில், எதிர்பாராதவிதமாக குடிசை எரிந்தது. இந்த தீயில் சிக்கிய அவரை மீட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.



அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார். மனைவி பிரிந்ததால் கணவர் தற்கொலை மாமல்லபுரம்: கல்பாக்கம், வசுவசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மணி மகன் ஆனந்தராஜ், 37; கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி; இரு மகன்கள் உள்ளனர்.குடி பழக்கத்திற்கு அடிமையான ஆனந்தராஜுக்கும், ரேவதிக்கு அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன் நடந்த சண்டையில், மகன்களுடன் வெளியேறிய ரேவதி, தோழி வீட்டில் தங்கினார்.இதனால் மனமுடைந்து, விரக்தியாக திரிந்த ஆனந்தராஜ், நேற்று முன்தினம், வீட்டில், துாக்கிட்டு இறந்தார்.



சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.'லிப்ட்' கேட்டு பயணித்தவர் மரணம்ஒரகடம்: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர், விஷ்ணுவரதன், 27. ஸ்ரீபெரும்புதுார் அருகே, மாத்துாரில் தங்கி, ஒரகடம் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.நேற்று, வேலைக்கு புறப்பட்ட விஷ்ணுவரதன், ஸ்ரீபெரும்புதுார் - -ஒரகடம் சாலையில், 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த நாகசுதன், 25, என்பவரிடம், 'லிப்ட்' கேட்டு பயணித்தார்.ஒரகடம் அருகே, வடகால் பகுதியில், சாலையின் குறுக்கே திடீரென வந்த மாடு மீது மோதி, இருவரும் விழுந்தனர்.அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத மினி வேன், விஷ்ணுவரதன் மீது ஏறியதில், சம்பவ இடத்தில் இறந்தார்.நான்கு பேர் கைது கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே, ஈகுவார்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலையில், கடந்த, 16ம் தேதி இரவு, 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருடு போனது.இது குறித்து பாதிரிவேடு போலீசில், தொழிற்சாலையின் மேலாளர் ராமதாஸ், 49, புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் திருட்டில் ஈடுபட்ட, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்களான கிரேஸ்தன், 19, சுபாஷ், 20, ராம், 26, சுப்பாயா, 21, ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X